
ஜெக்தீப் தன்கர் ராஜினாமா :
EC Announced Vice President Of India Election 2025 Date : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய போது, ராஜ்ய சபாவை குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர் வழி நடத்தினார். அன்றிரவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்ததாக குறிப்பிட்டார். பதவி விலகல் கடிதத்தை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைக்க, அது ஏற்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் :
இதைத்தொடந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்தநிலையில் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல்(Vice President Election 2025 Date) நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
தேர்தல் அட்டவணை:
07.08.2024 - தேர்தல் அறிவிப்பு நாள்
21.08.2024 - வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
23.08.2924 - வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்
09.09.2024 - வாக்குப்பதிவு நடைபெறும் நாள்
09.09.2024 - காலை 10 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடைபெறும்
என்டிஏ வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு:
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்போர் தேர்தலில் வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மேலும் படிக்க : அமைச்சர், ஆளுநர், துணை ஜனாதிபதி : ஜகதீப் தன்கர் கடந்து வந்த பாதை