
திமுக கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவு :
ECI Delists 474 More Political Parties in India : 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் விதிமுறைகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கையின்படி, தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து(TN Party Delist) செய்யப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி, ஈஸவரனின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
லெட்டர் பேடு கட்சிகளுக்கு வேட்டு :
இந்தியா முழுவதும் பிரதான கட்சிகள் தவிர்த்து சிறிய சிறிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் இருக்கின்றன. ஆட்களே இல்லாவிட்டாலும் ஒருவரால் கட்சி ஆரம்பிக்க முடியும். அப்படி நம் நாட்டில் கட்சிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. பெயருக்கு கட்சியை ஆரம்பித்து விட்டு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதாக புகார் எழுந்தது. எனவே, தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும்(EC Removed) நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
நிபந்தனைகளை நிறைவேற்றாத கட்சிகள் :
2019 முதல் 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் ஆவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் அது போன்று 64 அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் தமிழ்நாடு தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகள்(Election Commission De-Lists Registered Unrecognised Political Parties in Tamil Nadu List Here) :
1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி
2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)
3..அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி
4. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்
6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி
7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்
8. அனைத்து மக்கள் நீதி கட்சி
9.அன்பு உதயம் கட்சி
10.அன்னை மக்கள் இயக்கம்
11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி
12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்
13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்
14.எழுச்சி தேசம் கட்சி
15.கோகுல மக்கள் கட்சி
16. இந்திய லவ்வர்ஸ் கட்சி
17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி
20. மக்கள் தேசிய கட்சி
மேலும் படிக்க : 14 கோடி உறுப்பினர்கள், மிகப்பெரிய கட்சி BJP : JP நட்டா பெருமிதம்
21. மக்கள் கூட்டமைப்பு கட்சி
22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்
23. மனிதநேய ஜனநாயக கட்சி
24.மனிதநேய மக்கள் கட்சி
25.பச்சை தமிழகம் கட்சி
26. பெருந்தலைவர் மக்கள் கட்சி
27.சமத்துவ மக்கள் கழகம்
28.சிறுபான்மை மக்கள் நல கட்சி
29.சூப்பர் நேஷன் கட்சி
30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்
31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்
32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
33. தமிழர் தேசிய முன்னணி
34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி
35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி
36.தமிழர் முன்னேற்ற கழகம்
37. தொழிலாளர் கட்சி
38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
39. உரிமை மீட்பு கழகம்
40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி
41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்
42. விஜய பாரத மக்கள் கட்சி
==============