’வாக்கு திருட்டு’ குறித்த ராகுல் குற்றச்சாட்டு : ECI, BJP பதிலடி

Election Commission on Rahul Gandhi Vote Theft Remarks : வாக்குகள் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்திருக்கிறது.
Election Commission Of India on Rahul Gandhi Vote Theft Remarks in Tamil
Election Commission Of India on Rahul Gandhi Vote Theft Remarks in Tamil
1 min read

ராகுல் காந்தி குற்றச்சாட்டு :

Election Commission on Rahul Gandhi Vote Theft Remarks : வாக்கு திருட்டு என்ற பெயரில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கால் சென்டர்கள், மென்பொருள் உதவியுடன் ஓட்டு திருட்டு(Vote Theft) நடந்ததாகக் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார்(Gyanesh Kumar) காப்பாற்ற நினைப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் பதிலடி :

அவரது இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம்(Election Commission Of India) திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இவை 'தவறானது மற்றும் ஆதாரமற்றது' என்று நிராகரித்தது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் வாக்குகளை நீக்க முடியாது என்றும், நீக்கங்களுக்கு விசாரணை தேவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு நீக்க முயற்சிகள் தோல்வி :

கர்நாடகாவின் ஆலந்தா தொகுதியில் 2023ல் வாக்குகளை நீக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை உறுதிப்படுத்திய ஆணையம், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது. ஆலந்தா சட்டமன்றத் தொகுதியில் 2018-ல் சுபாஷ் குட்டேதாரும் (பாஜக), 2023-ல் பி.ஆர். பாட்டீலும் (காங்கிரஸ்) வெற்றி பெற்றனர்” என்பதையும் தேர்தல் ஆணையம்(EC) சுட்டிக் காட்டி இருக்கிறது.

ஆதாரங்களை தரத் தயங்கும் ராகுல் :

ஏற்கனவே, தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ராகுல் காந்தியை(Rahul Gandhi) கேட்டுக் கொண்டது. பிகார் மற்றும் பிற மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தம் தொடர்பான கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர். அனைத்து வாக்காளர் பட்டியல் திருத்தங்களும் வெளிப்படையாகவும், கடுமையான விதிகளின் கீழும் மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் விளக்கம் அளித்து இருக்கிறது.

ராகுலுக்கு பாஜக பதிலடி :

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத்தும்(BJP on Rahul Gandhi) பதிலடி கொடுத்துள்ளார். ” ராகுலுக்கு அரசியலமைப்பு குறித்து புரிதல் இருக்கிறதா? அவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ராகுலுக்கு சட்டமோ, நீதிமன்ற உத்தரவுகளோ புரியவில்லை என்று நினைக்கிறேன்.

அரசியலுக்காக கூச்சலிடுகிறார் :

சும்மா, அரசியலமைப்பு, அரசியலமைப்பு என்று கூச்சலிடுகிறார்.ராகுலுக்கு மக்கள் ஓட்டளிக்காததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவரது செயல்களை இந்த தேசம் மறக்காது. எதிர்க்கட்சித் தலைவருகு ஒரு மதிப்பு உள்ளது. நாட்டின் வாக்காளர்களை அவர் அவமதித்துள்ளார்.

மேலும் படிக்க : ’வாக்கு திருட்டு’ இழிவுபடுத்த வேண்டாம் : ஆதாரம் கேட்கும் ஆணையம்

ராகுல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் :

மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள். அவரின் அனைத்து குண்டுகளும் செயல் இழந்து போகும். அவர் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை” இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார்

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in