

அரட்டை அறிமுகம்
ZOHO Arattai App New Update in Tamil : தமிழகத்தை தலைமையிடமான கொண்டு உருாவகியுள்ள ஜோஹோ நிறுவனத்தின் அப்டேட் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதிலும் அயல்நாட்டு நிறுவனங்களின் செயலிகளான வாட்ஸ்ஃஆப், பேஃஸ்புக் உள்ளிட்டவற்றை பின்னுக்கு தள்ளி முன்னேறி வருகிறது ஜோஹோவின் புதிவித முயற்சிகள். அதன்படி, அரட்டை , உலா என தமிழகம் மட்டுமல்லாது உலகத்தின் உள்ள அனைவரையும் திரும்ப வைத்த ஜோஹோ தற்போது புதிய செயலிகளின் குறைபாடுகளை களைந்து பொளிவாகியுள்ளது.
அரட்டையில் அப்டேட்
அதாவது சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, அரட்டை அறிமுகப்படுத்தி சுதேசி செயலியான அரட்டைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. இதனால் பயனர்களுக்கு ஏராளமான அப்டேட்களை கொடுத்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தற்போது அரட்டை செயலியில், End to End என்கிரிப்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அரட்டை குறித்து ஸ்ரீதர் வேம்பு பதிவு
இது குறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில், அரட்டை செயலியை அப்டேட் செய்யுங்கள். இன்று செவ்வாய் இரவு முதல் End to End என்கிரிப்ஷன் வசதி செயல்பாட்டு வரும். இந்த அப்டேட் இன்னும் குரூப்பிற்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனை நாங்கள் சில வாரங்களில் அப்டேட் செய்வோம். இன்னும் பல அருமையான அம்சங்கள் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நன்றி. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
உச்சத்தை தொடும் அரட்டை பதிவிறக்கம்
என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் உள்ள நிலையில் தற்போது அரட்டை செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது புதிய வடிவமாக அரட்டை செயலி தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், இதன் பதிவிறக்கம் முன்னரே சர்வர் குறைபாடு வரும் அளவிற்கு இருந்த நிலையில், தற்போது முழு தனிநபர் பாதுகாப்பை பெற்றுள்ள இந்த அரட்டை செயிலியின் பதிவிறக்கம் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.