3,500 கோடி மதுபான ஊழல் : குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்

Jagan Mohan Reddy in Andhra Pradesh Liquor Scam : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
Former CM Jagan Mohan Reddy in Andhra Pradesh Liquor Scam
Former CM Jagan Mohan Reddy in Andhra Pradesh Liquor Scam
1 min read

ஆந்திராவில் மதுபான ஊழல் :

Jagan Mohan Reddy in Andhra Pradesh Liquor Scam : ஆந்திர மாநிலத்தில் 2019 முதல் 2024 வரை ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்தார். அப்போது மதுபான விற்பனை விவகாரத்தில் 3,500 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இ;l வழக்கில் சிறப்பு விசாரணை குழு இதுவரை 40 பேரை குற்றவாளிகளாக சேர்த்து, 11 பேரை கைது செய்துள்ளது.

மதுபான ஊழலில் கட்சி வளர்ச்சி :

ஜெகன் மோகன் ரெட்டி மாதந்தோறும் 50 முதல் 60 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. கேசி.ரெட்டி, ராஜசேகர் ரெட்டி, விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி மற்றும் பாலாஜி கோவிந்தப்பா ஆகியோரின் வலையமைப்பு மூலம் இந்தப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மதுபான ஊழல் பணம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்(YSR Congress) கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒய்எஸ்ஆர். காங்கிரசுக்கு கடும் நெருக்கடி :

இந்த வழக்கில் கடந்த வாரம் YSR காங்கிரஸ் எம்பி மிதுன் கைது செய்யப்பட்டார். பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மதுjஆன ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச காவல்துறை உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும் படிக்க : 2,100 கோடி மதுபான முறைகேடு : காங். முன்னாள் முதல்வர் மகன் கைது

மதுபான வழக்கு - ஜெகனுக்கு சிக்கல்

இதில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 305 பக்க குற்றப்பத்திரிகையில்(Andhra Pradesh Liquor Scam Chargesheet) குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் பெயர் இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான நாராயண சுவாமிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மதுபான ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆந்திர அரசியலில் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. கைது செய்யப்பட்டால், அவரது அரசியல் எதிர்காலமே பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in