2,100 கோடி மதுபான முறைகேடு : காங். முன்னாள் முதல்வர் மகன் கைது

Chhattisgarh Liquor Scam Case : சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார்.
Former Chief Minister Bhupesh Baghel Son Arrested by ED in Liquor Scam in Chhattisgarh
Former Chief Minister Bhupesh Baghel Son Arrested by ED in Liquor Scam in ChhattisgarhANI
1 min read

மதுபான கொள்முதல் ஊழல் :

Chhattisgarh Liquor Scam Case : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பூபேஷ் பாகல், 2019 முதல் 2023 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது மதுபான கொள்முதலில் முறைகேடுகள் நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, மது உற்பத்தி நிறுவனங்களிலிருந்து எவ்வித வரியும் செலுத்தப்படாமல் கொள்முதல் செய்யப்பட்ட மதுபானங்கள், அரசின் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தது.

மதுபான கொள்முதலில் ரூ.2,100 கோடி முறைகேடு :

இதன் காரணமாக 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா தொடர்புடைய இடங்களில் அமலாகத்துறை சோதனை நடத்த இருந்தது. இந்தநிலையில், இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பூபேஷ் பாகலும், அவரது மகனும் வசிக்கும் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க : ’இந்தியா’ கூட்டணிக்கு ஆம் ஆத்மி குட்பை : இனி தனித்தே போட்டி

பூபேஷ் பாகல் மகன் கைது :

இந்த நிலையில் சைதன்யாவுக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளது. மதுபான முறைகேட்டில் முதன்மை பயனாளியாக சைதன்யா இருப்பதாக அமலாக்கத் துறையினர் கூறுகின்றனர். சோதனையின்ம முடிவில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இன்று சைதன்யாவின்(Bhupesh Baghel Son Chaitanya) பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரயில் கிளம்பிய பிறகும் டிக்கெட் புக்கிங்: ’வந்தே பாரத்’ - அறிமுகம்

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in