விநாயகர் சதுர்த்தி மாநில விழா 2025 : மகாராஷ்டிரா அரசு கௌரவம்

Maharashtra State Festival Vinayagar Chaturthi 2025 : விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மாநில அந்தஸ்து வழங்கி மகாராஷ்டிரா அரசு கௌரவித்து இருக்கிறது.
Maharashtra Government Announcement Vinayagar Chaturthi 2025 As State Festival
Maharashtra Government Announcement Vinayagar Chaturthi 2025 As State Festival
1 min read

Maharashtra State Festival Vinayagar Chaturthi 2025 : முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் அவதரித்த தினம் ஆவணி சதுர்த்தி ஆகும். அந்த நாள் விநாயகர் சதுர்த்து விழாவாக இந்துக்களால் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி :

அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி 27ம் தேதி நாளை மறுநாள்(Vinayagar Chaturthi 2025 Date) கொண்டாடப்பட உள்ளது. 10 நாட்கள் விழாவுக்கான ஏற்பாடுகள் மகாராஷ்டிராவில் களைகட்டி உள்ளன.

மும்பையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் :

மும்பையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்தப்படும். இதில், பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்வர். அதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி அரசு விழா :

இந்நிலையில்,விநாயகர் சதுர்த்திக்கு, மஹாராஷ்டிரா அரசு மாநில விழா(Maharashtra State Festival) என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவித்துள்ளது. இதனால், பக்தர்களும், விழா கமிட்டியினரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். விழா செலவுகளுக்காக 11 கோடி ரூபாய் நிதியையும் மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது.

சமூக பணிக்கு நிதியுதவி தேவை :

சமூக பணிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவோர் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு மாநில அரசு நிதியுதவி வழங்கினால் சமூக பணிகள் தொய்வின்றி நீடிக்கும் என்று, விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்துவோர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

தற்போது மாநில அரசு சார்பில் 1,800 பஜனை அமைப்பினருக்கு மட்டும் அரசு சார்பில் தலா 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி 2025 : சாமி கும்பிட நல்ல நேரம் இதுதான்

விநாயகர் சதுர்த்திக்கு மாநில கௌரவம் வழங்கப்பட்டு இருப்பதால், விழாவை காண மும்பைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in