’கூகுள் CEO சுந்தர் பிச்சை’ : சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள்

Google CEO Sundar Pichai Net Worth 2025 : கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடந்துள்ளது.
Google CEO Sundar Pichai Net Worth 2025
Google CEO Sundar Pichai Net Worth 2025
1 min read

உச்சத்தில் கூகுள் நிறுவனம் :

Google CEO Sundar Pichai Net Worth 2025 : தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னனாக இயங்கி வருவதுதான் கூகுள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர்தான் சுந்தர் பிச்சை.

கூகுள் சிஐஓ சுந்தர் பிச்சை :

தமிழகத்தை சேர்ந்த 53 வயதான சுந்தர் பிச்சை, படித்தது, வளர்ந்தது தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடியிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர்(Sundar Pichai Biography). 2004ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் சுந்தர் பிச்சை. படிப்படியாக முன்னேறிய அவர், 2015 முதல், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார்.

சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் :

கூகுள் சிஇஓவான சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு(Sundar Pichai Net Worth) 1 பில்லியன் டாலரை தாண்டி இருக்கிறது. இதற்கு காரணம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை(Alphabet Shares Price) பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டதுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் பலன் அடைந்துள்ளனர். சுந்தர் பிச்சை பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை அதாவது 10 ஆண்டுகளில் கூகுளின் மதிப்பு 400 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தற்போது அந்த நிறுவனத்தின் சொத்து(Google Net Worth 2025) இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடியாக இருக்கிறது.

சொத்து மதிப்பு ரூ. 8,000 கோடி :

இதன் மூலம் நிறுவனர் அல்லாத சிஇஓ பிரிவில் 10 இலக்க சொத்து மதிப்பை கொண்டுள்ளவர்களின் பட்டியலில் ஒருவராக சுந்தர் பிச்சை(Sundar Pichai) இணைந்துள்ளார். தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க : தனிநபர் வருமானம், முதலிடத்தில் கர்நாடகா : 2ம் இடத்தில் தமிழ்நாடு

சிஇஓ- ஆக சுந்தர் பிச்சை சாதனை :

போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக(Sundar Pichai in Forbes Billionaires List 2025) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியலில் அவர் இணைந்து இருக்கிறார். நிறுவனர் அல்லாத நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரது சொத்து மதிப்பு இந்த அளவு அதிகரித்து இருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in