
ஜிஎஸ்டி வரி குறைப்பு, 22ம் முதல் அமல் :
GST Tax Rates Cut in Milk And Agriculture Products : நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு 2 அடுக்குகளாக மாற்றப்பட்டு, வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது. இதன் முழு நன்மையும் சாமான்ய மக்களுக்கு கிடைக்க உள்ளது. அந்த வகையில், பால்வளத்துறை, உள்நாட்டு பயிர்களுக்கு GST மூலம் கிடைக்கும் பலன்களை பார்ப்போம். ஜிஎஸ்டி வரி குறைப்பு, உள்நாட்டுப் பால் உற்பத்தியான NDDB (தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்)க்கு திருப்பு முனையாக அமைந்து இருக்கிறது.
இந்தியாவில் RUC உற்பத்தி :
குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள NDDB உள்நாட்டு
உற்பத்தியான RUCயை தொடங்கியுள்ளது. RUC என்பது, தயிர், லஸ்ஸி, மோர் மற்றும் சீஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பாக்டீரியா கலவை ஆகும். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், இதுவரை ஐரோப்பாவிலிருந்து ( குறிப்பாக டென்மார்க்) RUC-களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாக பால் பொருட்களின் விலையும் அதிகரித்து, விநியோகத்தில் செலவினங்கள் அதிகமாக இருந்தது.
உள்நாட்டு RUC உற்பத்தியால் பால்வளத்துறைக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க இருக்கின்றன. அதாவது, நிலையான தரம் கிடைக்கிறது. நாம் செய்யும் பாக்டீரிய உற்பத்தியின் பயன்பாடு நேரடியாக பால் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
20 லட்சம் லிட்டர் RUC உற்பத்தி - இலக்கு :
NDDBஇன் துணை நிறுவனமான IDMC லிமிடெட் தினமும் 10 லட்சம் லிட்டர் பாலை நொதிக்க வைக்க போதுமான RUC-ஐ உற்பத்தி செய்கிறது,இதை 20 லட்சம் லிட்டராக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் RUC சந்தை மதிப்பு 300 கோடியாகும். இதில் NDDB 20% சந்தைப் பங்கை கைப்பற்றும் முனைப்படும் செயல்பட்டு வருகிறது. 20 லட்சம் லிட்டர் என்ற உற்பத்தி இலக்கை எட்டும் திட்டம் கடந்த ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு நேரடி நிவாரணம் :
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் விவசாயிகள் மற்றும் பால்வளத் துறைக்கு நேரடி நிவாரணம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. 10 கோடி
பால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற கூட்டுறவு நிறுவனங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது.
வரி குறைப்பு பெறும் பால் பொருட்கள் :
பால் & சீஸ்க்கு (பிராண்டட்/பிராண்டட் அல்லாத) ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், பிற பால் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.
சீஸ், நம்கீன், பாஸ்தா, ஜாம், ஜெல்லி, பழ கூழ், பானங்கள் ஆகியவற்றுக்கும் இனி 5% ஜிஎஸ்டி தான். சாக்லேட், கார்ன் ஃப்ளேக்ஸ், பிஸ்கட், காபி, ஐஸ்கிரீம், கேக்குகள் மீதான ஜிஎஸ்டி18% பதிலாக இனி
5% ஆக மட்டுமே இருக்கும். பால் கேனிஸ்டர்கள் (இரும்பு/எஃகு/அலுமினியம்) ஆகியவற்றுக்கான வரி விதிப்பு 12% முதல் 5% வரை இருக்கும்.
விவசாயத்துறை பெறும் பயனன்கள் :
விவசாயத்துறைக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை அமைந்து இருக்கிறது. அதன்படி, டிராக்டர்கள் (1800 CCக்குக் கீழே), டயர்கள், குழாய்கள், பம்புகளுக்கு 5% GST வரி. உர மூலப்பொருட்கள் (அம்மோனியா, சல்பூரிக்/நைட்ரிக் அமிலம்) ஜிஎஸ்டி 18% முதல் 5% வரை இருக்கும். . உயிரி-பூச்சிக்கொல்லிகள் & நுண்ணூட்டச் சத்துக்களுக்கு 5% GST மட்டுமே வசூலிக்கப்படும்.
சரக்கு வாகனங்களுக்கான GST 28% ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. சரக்கு வாகனங்களுக்கான காப்பீடு 5% குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக விவசாயிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு செலவுகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். இயந்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். உரங்களின் விலையும் குறையும்.
பால் பதப்படுத்தும் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இறக்குமதியை பெரிய அளவில் நம்பியிருக்க தேவையில்லை. குறைதல், செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும், கூடுதலாக உற்பத்தியும் செய்ய முடியும்.
தரம் மேம்படுத்தப்பட்டு, விநியோகச் சங்கிலி பாதுகாப்புடம் இயங்கும்.
நுகர்வோருக்கு: மலிவான பால் மற்றும் உணவுப் பொருட்கள், குறைந்த விலையில், அதிக தரத்துடன் கிடைக்கும்.
மேலும் படிக்க : 0% GST: பால் to மருந்துகள் வரை : இனி வரி இல்லை, மக்கள் மகிழ்ச்சி
மகளிர் சுய உதவிக் குழுக்கள் :
கிராமப்புற பொருளாதாரத்தை பொருத்தவரை, பெண்கள் தலைமையிலான மகளிர் குழுக்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் FPO களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதால், கிராம தொழில்கள் ஊக்குவிக்கப்படும்.
இந்தியாவின் பால்வளத் துறையை பொருத்தவரை தன்னம்பிக்கை அதிகரித்து, உலகளாவிய போட்டித்தன்மையோடு, ரூ.300 கோடிக்கு RUC சந்தை மூலம் சிறப்பான எதிர்காலத்தை ஜிஎஸ்டி வரிக்குறைப்பு வழி வகுத்து கொடுத்திருக்கிறது.
======================