
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் :
56th GST Council Meet : சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு வரி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. வரி விதிப்பில் நான்கு அடுக்குமுறை அகற்றப்பட்டு, 2 அடுக்குமுறை அமலாகிறது. வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது.
வரி விதிப்பே இல்லாத பொருட்கள்
இந்த அறிவிப்பு மூலம் பல்வேறு பொருட்கள் ஜீரோ ஜிஎஸ்டி வரிக்கு கீழ் வந்துள்ளன.அதாவது முன்பு 5% - 12% வரிகள் விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது(GST Free Items List in Tamil) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
* அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT Milk), ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இது நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.
* பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பன்னீருக்கு முழுமையான வரி விலக்கு. சில்லறையில் விற்பனை செய்யப்படும் பன்னீருக்கு ஏற்கனவே வரி விலக்கு உள்ளது.
* ரொட்டி, சப்பாத்தி, பராத்தா, புரோட்டா உள்ளிட்ட அனைத்து இந்திய ரொட்டி வகைகளும் ஜிஎஸ்டி வரி இல்லாமல் விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக இவற்றின் விலை குறையும்.
* உயிர்காக்கும் மருந்துகள்,புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு
* அரிய மரபணு நோய்களுக்கான மருந்துகளும் ஜிஎஸ்டி வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
* 33 விலையுயர்ந்த மருந்துகளுக்கும் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இவற்றுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், முக்கியமான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் மாதச் செலவுகள் கணிசமாக குறையும். இதன் காரணமாக நடுத்தர குடும்பங்கள் நிதி சுமையில் இருந்து மீள முடியும்.
பெரும்பாலான மருந்துகள் மானியத்துடன் இறக்குமதி செய்யப்படுவதால், அரசின் வருவாயில் பெரிய பாதிப்பு இருக்காது.
மேலும் படிக்க : GST 2.O Reforms : 2 அடுக்குகளாக குறைப்பு: 22ம் தேதி முதல் அமல்
மருத்துவ உபகரணங்கள் பஞ்சு, காஸ், பேண்டேஜ்கள், நோயறிதல் கருவிகள், வினைப்பொருட்கள், ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு (குளுக்கோமீட்டர்) போன்ற பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் மீதான ஜி.எஸ்.டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது..
====