சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள்: முன்னேறிய இந்தியா, 77வது இடம்

World Powerful Passport Ranking List 2025 : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா சற்று முன்னேறி, 77வது இடத்தை பிடித்திருக்கிறது.
World Powerful Passport Ranking List 2025 Of India
World Powerful Passport Ranking List 2025 Of India
1 min read

199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் :

World Powerful Passport Ranking List 2025 : ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் என்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பிரிட்டனின் Henley Passport Index-ன் புதிய பட்டியலின்படி, நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006 முதல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் (IATA) வழங்கும் தரவுகளின் அடிப்படையில், 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை, 227 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகை அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறது.

முதலிடத்தில் சிங்கப்பூர் :

தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர்(Singapore Passport Rank 2025) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

2ம் இடத்தில் ஜப்பான் :

இரண்டாவது இடத்தில் ஜப்பான்(Japan Passport Rank 2025), தென் கொரியா உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுக்கு 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க அனுமதி தருகின்றன.

189 நாடுகளுக்கு பயணிக்கலாம் :

மூன்றாவது இடத்தை ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஏழு நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல்(Visa Free Passport Ranking 2025) செல்லலாம்.

மேலும் படிக்க : உலகின் பாதுகாப்பான நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா

4வது இடத்தில் 7 ஐரோப்பிய நாடுகள் :

192 நாடுகளுக்கு விசா இல்லாமல்(VISA Free) நுழையும் அனுமதியுடன் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸ்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் நான்காவது இடத்தில் உள்ளன.

10வது இடத்தில் அமெரிக்கா :

அமெரிக்கா இந்தாண்டுக்கான பட்டியலில் ஒரு இடம் சரிந்து 10வது இடம்(American Passport Rank 2025) பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் 182 நாடுகளுக்கு விசா எடுக்க தேவையில்லை. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 34வது இடத்தில் உள்ளது.

77வது இடத்தில் இந்தியா :

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வரிசையில் கடந்தாண்டு, 85வது இடத்தில் இருந்த இந்தியா, சற்று முன்னேறி 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது(Indian Passport Rank 2025). பாஸ்போர்ட் மூலம் இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நாம் எந்த தடையும் இன்றி பயணிக்கலாம்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in