எங்களிடம் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை; இருந்தால் நிச்சயம் வழங்குவோம்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக முதல்வர்!

தமிழகத்திற்கு நீர் வழங்குவது குறித்து கர்நாடக முதல்வர் பேசியது குறித்து...
If we have water, we will certainly provide it – Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar!
If we have water, we will certainly provide it – Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar!source: google
1 min read

"We don't even have enough water for our own drinking needs; if we did, we would certainly provide it," says the Chief Minister of Karnataka, following the Supreme Court's order.

போதிய தண்ணீர் இருந்தால் திறந்து விடத் தயார்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரியில் போதிய தண்ணீர் இருப்பு இருந்தால், தமிழகத்திற்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறை நீரைத் திறந்து விட இடைக்கால மனுக்கள்

முன்னதாக, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய மீதமுள்ள 11 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடுமாறு, தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று (20-11-2026) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்திற்கு பின்னடைவு?

பதினோராயிரம் மில்லியன் கியூபிக் கன அடி நீரைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எங்களிடம் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை

இந்த நிலையில் தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரியில் போதுமான நீர் இருப்பு இருந்தால், நிச்சயமாக தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்து விடுவோம்.

ஆனால் எங்களிடம் குடிப்பதற்கே போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லை. எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

போதிய தண்ணீர் இருப்பு குறித்து அனைவருக்கும் தெரியும்

மேலும் அவர், நீர் இருப்பு குறித்து நம் விவசாயிகளை ஏற்கெனவே எச்சரித்து உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு இன்று (20-11-2026) தாக்கள் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கள நிலவரம். நமக்கும் அது தெரியும்..தமிழ்நாட்டிற்கும் அது தெரியும். அனைவருக்கும் எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீபத் தூணில் ஒளிரப் போகும் கார்த்திகை தீபம் : திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு, முழு விபரம்!