நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்
Lok Sabha Seats after Delimitation 2026 : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது நடந்து முடிந்த நிலையில் இதன் 2வது அமர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் பேசும்போது,
அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் இதில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்
இடஒதுக்கீட்டை முன்கூட்டியே அமல்படுத்த திட்டம்
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம்
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அச்சட்டம் தெரிவிக்கின்றது .
புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய மசோதா: மாநிலங்களின் விவரம்
இந்த புதிய மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில் , உத்தர பிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 120 ஆக உயரும், அதைபோல தமிழகத்தில் 59 ஆக மட்டுமே அதிகரிக்கும்.
வட மாநிலங்கள் கூடுதலாக 200 தொகுதிகளைப் பெறும். தென் மாநிலங்களுக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் படிக்க :Lok Sabha : மக்களவையில் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் : 33% இட ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள்!