விண்வெளியில் வெந்தயம், பயறு வளர்ப்பு : அசத்தும் சுபான்ஷூ சுக்லா

Indian Astronaut Shubhanshu Shukla : சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுக்லா, வெந்தயம், பச்சைப்பயறு நாற்றுகளை வளர்த்து அசத்தி இருக்கிறார்.
Indian Astronaut Shubhanshu Shukla at International Space Station
Indian Astronaut Shubhanshu Shukla at International Space Station
1 min read

விண்வெளி ஆராய்ச்சி - அசத்தும் இந்தியா :

Indian Astronaut Shubhanshu Shukla Latest Update: விண்வெளி துறையிலும் தொடர்ந்து சாதித்து வரும் இந்தியா நிலவை ஆய்வு செய்ய விண்கலம், செவ்வாயை கோளை ஆய்வு செய்ய விண்கலம் என்று முத்திரை பதித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ககன்யான் திட்டம் மூலம் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவுக்கு என விண்வெளியில் தனியாக மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா:

இந்தநிலையில், இந்திய விமானப்படை வீரரான சுபான்ஷூ சுக்லா, ரஷ்யாவில் பயிற்சி பெற்று விண்வெளிக்கு சென்றிருக்கிறார். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம்(SpaceX Dragon spacecraft) வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4(Axiom Mission 4) திட்டத்தில், சுபான்ஷு சுக்லா(Shubhanshu Shukla) உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

விண்வெளியில் விவசாயம் :

அங்கு ஆய்வு பணிகள மேற்கொண்டு வரும் அவர், விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக(Farmer) மாறினார் சுபான்ஷு சுக்லா. பூமியில் இருந்து தான் கொண்டு சென்றிருந்த வெந்தயம், பச்சை பயிறு விதைகளை கொண்டு நாற்று வளர்த்துள்ளார்.

ஈர்ப்பு விசை பாதிப்பு பற்றி ஆய்வு :

பெட்ரி டிஷ்களில் முளைக்கும் பச்சைப்பயறு(Green Gram) மற்றும் வெந்தய விதைகளின்(Fenugreek) புகைப்படங்களை எடுத்து, விதை முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தை நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வை சுக்லா மேற்கொண்டு உள்ளார் சுபான்ஷு சுக்லா. முளைகள் பரிசோதனையை தார்வாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வழிநடத்துகின்றனர்.

பூமிக்கு கொண்டு வரப்படும் நாற்றுகள் :

பூமிக்குத் திரும்பியதும், விதைகள் பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு, அவற்றின் மரபியல், நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் வீரியம் மிக்க விதைகளை உருவாக்குவது பற்றியும் பரிசீலிக்கப்படும்.

மற்றொரு பரிசோதனையில், சுபான்ஷு சுக்லா நுண்ணுயிரிகளை பயன்படுத்தி சேமித்து வைத்தார், அவை உணவு, ஆக்ஸிஜன் மற்றும் உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக ஆராயப்படுகின்றன.

சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பும் தேதி:

14 நாட்கள் ஆய்வு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களும் வரும் 14ம் தேதி டிராகன் விண்கலம்(Shubhanshu Shukla Return Date) மூலம் பூமிக்கு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in