
இந்தியாவில் பாதுகாப்பு படைகள் :
US Apache Helicopters Arrives in India : உலகில் பெரிய அளவில் பாதுகாப்பு படைகளை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. வான்வழி, கடல் வழி, தரை வழி கண்காணிப்பிற்காக அதி நவீன சாதனங்கள் வாங்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டு முப்படைகளிலும் சேர்க்கப்படுகின்றன. இத்தகையை நவீனத்துவம் இந்தியாவின் ராணுவ(Indian Army) வலிமையை மேம்படுத்துகிறது.
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் :
அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்(Apache Helicopter). இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது.
5,171 கோடியில் ஹெலிகாப்டர்கள் :
இந்தியாவிடம் ஏற்கனவே பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் இருந்தாலும், அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 ஹெலிகாப்டர்களை வாங்க, 2020ம் ஆண்டு ஒப்பந்தம்(Apache Helocopter India Deal) மேற்கொள்ளப்பட்டது. ரூ.5,171 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஏற்கனவே, 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன்(America) செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
மேலும் படிக்க : ரயில் கிளம்பிய பிறகும் டிக்கெட் புக்கிங்: ’வந்தே பாரத்’ - அறிமுகம்
துல்லிய தாக்குதலில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் :
தற்போது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்(Apache Helicopters Arrived in India) இந்தியா வந்துள்ளன. நடுத்தர வகை பீரங்கி மோட்டார், அதிநவீன ஏவுகணைகள், ரேடார்கள் இதில் இடம் பெற்று இருக்கும். வேகத்தில் ஈடு இணையற்ற அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ரேடார் உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை. எதிரி நாட்டு ரேடார்களாலும் இந்த ஹெலிகாப்டர்களை பயணிப்பதை கண்டறிய முடியாது.
வல்லரசு நாடுகள் வரிசையில் இந்தியா :
அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த வகை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்(Apache Helicopters Countries) பயன்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ள இந்தியாவும் தனது வலிமையை பெருக்கி உள்ளது.
====