
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி :
Indian Diplomat Petal Gahlot Slams Pakistan PM Shehbaz Sharif UN Speech : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ’ஆப்பரேஷன் சிந்தூர்; நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. துல்லியமான நடத்தப்பட்ட இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை கேட்டுக் கொண்டது. இதே ஏற்று இந்தியாவும் தாக்குதலை நிறுத்தியது.
பாகிஸ்தானை தோலுறித்த இந்தியா :
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையின்(UNGA Meet 2025) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உண்மையை திரித்து, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு இந்தியா சார்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டு பாகிஸ்தானின் நாடகம் அம்பலப்படுத்தப்பட்டது. இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
போர்நிறுத்தம் - மன்றாடிய பாகிஸ்தான் :
இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெலாட் உரையாற்றுகையில், ” இந்தச் சபை காலையில் பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து அபத்தமான நாடகங்களைக் கண்டது, அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை ஆதரித்தார்.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியது என்பதுதான் உண்மை. போர் நிறுத்தத்தில்(India Pakistan War Ceasefire) எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை.
துல்லிய தாக்குதல் நடத்திய இந்தியா :
இந்தியப் படைகளால் பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த சேதத்தின் படங்கள், நிச்சயமாக, பொதுமக்களுக்குக் கிடைக்கின்றன. பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பயங்கரவாத முகாம்களில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பல படங்களை நாங்கள் பார்த்தோம்.
பாகிஸ்தான் பிரதமர் பொய் நாடகம் :
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எந்த பிரச்சினையாக இருந்தாலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். இதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்த இடமும் கிடையாது. நாடகம், பொய் மூலம் உண்மைகளை மறைத்துவிட முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் மிகவும் பொய்யான கதைகளை, வெட்கமில்லாமல் கூறி இருக்கிறார்.
பங்காளியாக நடிக்க கூடாது
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்காளியாக நடிப்பது, மற்றொரு பக்கம் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததை நான் நினைத்து பார்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைச்சர்களே, பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது.
மேலும் படிக்க : ”ஏழு போர்களை நிறுத்தி இருக்கிறேன்” : ஐ.நா. மீது டிரம்ப் பாய்ச்சல்
மிரட்டல்களுக்கு பணிய மாட்டோம் :
பாகிஸ்தானின் அணுசக்தி மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. உலகிற்கு இந்தியா தெளிவாக கூற விரும்புவது என்னவென்றால், பயங்கரவாதத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதுதான். பாகிஸ்தான் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் . வெறுப்பு, மதவெறி மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றில் ஒரு நாடு மூழ்கி உள்ளது, இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு பெட்டல் கெலாட் ஆவேசமாக பேசி பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்து எறிந்தார்.
===============