உலகக் கோப்பை ’செஸ் சாம்பியன்’ : வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்

Divya Deshmukh Wins FIDE World Cup Chess 2025 : மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார்.
Indian Chess Player Divya Deshmukh Wins FIDE World Cup Chess Championship 2025
Indian Chess Player Divya Deshmukh Wins FIDE World Cup Chess Championship 2025
1 min read

செஸ் உலகில் இந்தியா ஆதிக்கம் :

Divya Deshmukh Wins FIDE World Cup Chess 2025 : ஜார்ஜியாவில் மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் வரலாற்று சாதனையாக இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் 2 பேர் முன்னேறினார்கள், செஸ் உலகில் இந்தியாவின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இருந்தாலும் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மோதுவது என்பது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

கொனேரு ஹம்பி :

இந்தியாவின் முதன்மை பெண் செஸ் வீராங்கனையான ஹம்பி(Koneru Humpy), உலக ரேபிட் சாம்பியனாக இருக்கிறார். அரையிறுதியில் சீனாவின் லெய் டிங்ஜியை தோற்கடித்த அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

திவ்யா தேஷ்முக் :

19 வயதான இளம் வீராங்கனையான திவ்யா(Divya Deskmukh), முன்னாள் உலக சாம்பியன் டான் ஜாங்யியை அரையிறுதியில் அபாரமாக வீழ்த்தி, மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் இரண்டு ஆட்டங்கள் டிரா :

இறுதிப் போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதினர். இந்த ஆட்டம் 34வது நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது.

வெற்றியை தீர்மானித்த டை-பிரேக்கர் :

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் போட்டி இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த அபார வெற்றியின் மூலம் இந்தியாவின் நான்காவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் திவ்யா தேஷ்முக்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in