

காவல்துறை மீது விமர்சனம், பாராட்டு
Jaish-e-Mohammed Terrorist Poster in Srinagar : மோசமான பணி நெறிமுறைகள் மற்றும் ஊழல்களுக்காக சமூக ஊடகங்களில் காவல்துறையினர் அதிகமாகவே விமர்சிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் சிறப்பான பணிகளைச் செய்யும்போது, அதே அளவில் பாராட்டுக்கு தகுதியானவர்கள் என்பதை யாரும் மறுக்க கூடாது. அவர்களுக்கு அளிக்க வேண்டிய அங்கீகாரம், பாராட்டினை வழங்கவும் தயங்கக் கூடாது.
தீவிரவாதிகளை புகழும் சுவரொட்டிகள்
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரை பொருத்தவரை 2 பயங்கரவாத குழுக்களை புகழ்ந்து பேசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டாலும்(Jaish-e-Mohammed Poster), வெறும் விமர்சனத்தோடு அவரை மறக்கப்படும். அவை அகற்றப்பட்டதும் மக்கள் மறந்து விடுவார்கள். அதை ஒட்டியது யார்? பின்னணி என்ன என்று தீவிர விசாரணை நடத்தப்படுவது வழக்கத்தில் இல்லாமல் இருந்தது. இத்தகைய சுவரொட்டிகள் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படும் அவ்வளவு தான்.
துரிதமாக செயல்பட்ட போலீசார்
ஆனால், கடந்த மாதம் 19ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு(Jaish-e-Mohammed Poster in Srinagar) இருந்தன. காவல்துறை அதிகாரிகள் இதை சாதாரணமாக கடந்து போகாமல், நடவடிக்கை எடுத்து விசாரணையை முடுக்கி விட்டதால், ஃபரிதாபாத்தின் வெள்ளை காலர் பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஒற்றை முடிவு - அம்பலமான பயங்கரவாதம்
ஸ்ரீநகர் எஸ்எஸ்பி ஜிவி சந்தீப் சக்ரவர்த்தி, சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கான மூலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று களமிறங்கினார். இதே வெறும் எதிர்ப்பு வாசகம் அடங்கிய சுவரொட்டியாக மட்டும் கருத அவர் தயாராக இல்லை.
டாக்டர் அடில் அகமது கைது
உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற அந்த ஒற்றை முடிவு, மிகப்பெரிய உண்மையை உலகிற்கு காட்டிக் கொடுத்தது. பட்டாம்பூச்சி விளைவால். முதலில் சிசிடிவி காட்சிகள் சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் அடில் அகமது ராதரை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தன.
வெடிப்பொருட்கள் பறிமுதல்
அதன் தொடர்ச்சியாக ஃபரிதாபாத்தில் டாக்டர் முஸ்ஸாமில் ஷகீல், IED தயாரிக்க பதுக்கி வைத்து இருந்த 3,000 கிலோ வெடிப்பொருட்களை பறிமுதல் செய்ய உதவியது. இதன் மூலம் காஷ்மீரில் தொடங்கி ஃபரிதாபாத் வழியாக டெல்லி வரை பரவிய பயங்கரவாத தொகுதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.
மிகப்பெரிய சதி முறியடிப்பு
டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது, 13 பேர் பலியானார்கள். இது மிகவும் வருத்தமான விஷயம் தான். ஆனால் காஷ்மீர் காவல்துறை சுவரொட்டியை பார்த்து நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்திருந்தால், புல்வாமாவை விட 10 முதல் 15 மடங்கு அதிகமான அந்த வெடிபொருட்கள் வெடித்து இருக்கலாம். நாடு இதுவரை ண்டிராத அளவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி இருக்கலாம்.
போலீசாரின் சரியான செயல்பாடு
காவல்துறை என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். சிறிய விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல், களத்தில் இறங்கி, விழிப்பான கண்கள், ஆர்வமுள்ள மனம் மற்றும் இடைவிடாத பின்தொடர்தல் மேற்கொண்டால், எத்தகைய சதியையும் முறியடிக்கலாம்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தர பிரதேச காவல்துறை துல்லியமாக கணித்து சரியாக செயல்பட்டதன் விளைவு, பல்லாயிரக் கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன.
காவல்துறைக்கு சல்யூட்
நாடு எப்போதும் பாதுகாப்புடன் இருப்பதை இது உறுதி செய்கிறது. காவல்துறை மீது மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கை, மரியாதை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய செயல்களை அனைவரும் பாராட்டுவோம், போற்றுவோம். காவல்துறைக்கு உறுதுணையாக நின்று, வலிமையான, அமைதியான இந்தியாவோடு பயணிப்போம்.
===============