

வியப்பூட்டும் பிகார் தேர்தல் முடிவுகள்
Lok Janshakti Party Wins 22 Seats in Bihar Election Results 2025 : பிகார் சட்டமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் வெளிவர வெளிவர ஆச்சரியங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 165 தொகுதிகள் வரை தான் என்டிஏ வெற்றி பெறும் பெரும்பாலும் கணிக்கப்பட்ட நிலையில், 200 தொகுதிகளை தாண்டி இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள் மோடியும், நிதிஷ்குமாரும்.
22 இடங்களில் லோக்ஜன் சக்தி
கடந்த 2020ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, பாஜ மற்றும் நிதிஷ் உடன் அமைத்த கூட்டணியால் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த இடங்கள் அந்தக் கட்சியின் வசமாக உள்ளன.
லோக் ஜன்சக்திக்கு ஜாக்பாட்
பிகார் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போகும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட கூடுதல் இடங்களை வென்றுள்ளன. ஆனால், இந்த இரு கட்சிகளை விட, கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சிக்கு அபரிவிதமான வளர்ச்சியை இந்தத் தேர்தல் வழங்கி இருக்கிறது.
எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி
ஓட்டுத் திருட்டு, ஓட்டு அதிகார யாத்திரை என்று பல்வேறு வழிகளில் பாஜக மற்றும் நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், சிராக் பஸ்வான் என்டிஏ கூட்டணியில் இணைந்தார். அவரது வருகை என்டிஏவுக்கு பெரும் வலிமையை சேர்த்தது
லோக்ஜன் சக்திக்கு இஸ்லாமியர் ஆதரவு
லோக்ஜன் சக்திக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 22 கட்சிகளை அந்தக் கட்சி கைப்பற்றுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை ஆர்ஜேடி, காங்கிரசிடம் இருந்து கைப்பற்றுகிறது. இந்தக் கட்சி 2020ம் சட்டசபை தேர்தலில் 137 இடங்களில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
யாரும் கணிக்க முடியாத வெற்றி
அதளபாதாளத்தில் கிடந்த லோக் ஜன்சக்தி கட்சிக்கு யாராலும் கணிக்க முடியாத வெற்றி கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் சிராக் பஸ்வான் வெற்றி பெற்று, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தாலும், பிகார் தேர்தலை பொறுத்தவரையில் அவரது கட்சி ஓரங்கட்டப்பட்டிருந்தது என்பதே உண்மை.
முக்கிய வெற்றியாளர் சிராக் பஸ்வான்
தொகுதி பங்கீட்டின் போது லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 இடங்களை ஒதுக்கிய போது, தேஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அதனை நேரடியாக விமர்சித்தன. ஆனால், இன்றைய முடிவுகளை பார்க்கும் போது முக்கிய வெற்றியாளராக சிராக் பஸ்வான் பார்க்கப்படுகிறார்.
பாஜகவால் சிராக் எழுச்சி
உட்கட்சி பூசல் இருந்தாலும் தனது கட்சியை கட்டியெழுப்பு, தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபித்து இருக்கிறார் சிராக். 2020ல் நிதிஷ்குமாருடன் இவருக்கு மோதல் இருந்தாலும், மோடி, அமித்ஷா முன்னெடுத்த சமாதன முயற்சிக்கு, இன்று வெற்றி கிடைத்து இருக்கிறது.
கணிப்புகளை பொய்யாக்கிய சிராக் பஸ்வான்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் சிராக் பஸ்வானின் கட்சி 10 முதல் 15 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதை முறியடித்து, 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வெற்றிக்கனியை பறிக்க போகும் சிராக் பஸ்வான், தனது தந்தை ராம்விலாஸ் பஸ்வான் போன்றே பிகார் அரசியலில் இனி எழுச்சி நாயகனாக வலம் வர இருக்கிறார்.
=============