ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் : அக்.1 முதல் அமல்

Aadhaar Mandatory for IRCTC Train Ticket Online Booking : ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் கட்டாயமாகிறது. இது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
Aadhaar Mandatory for IRCTC Train Ticket Online Booking
Aadhaar Mandatory for IRCTC Train Ticket Online Booking
1 min read

ரயில் முன்பதிவு நடைமுறை :

Aadhaar Mandatory for IRCTC Train Ticket Online Booking : ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர், ஐஆர்சிடிசி ( IRCTC ) என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியன் ரயில்வே அங்கீகரித்த அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி (App) மூலமும் டிக்கெட்டுளை முன்பதிவு செய்யலாம் என்றாலும் அதிகமானோரின் தேர்வு ஐஆர்சிடிசி ஆகவே உள்ளது.

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் :

ஏற்கனவே, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறையில்(Aadhaar Mandatory for Tatkal Train Ticket Booking) உள்ளது. தட்கல் ஆன்லைன் முன்பதிவின் போது பயணிகள் கணக்கு ஆதாருடன் சரிபார்க்கப்படும். அப்படி சரிபார்க்கப்படவில்லை என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாது.

ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் :

ஆன்லைனில் முன்பதிவு(New IRCTC Rules 2025) செய்யும் போது முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஆன்லைன் முன்பதிவை மேம்படுத்தும் வகையிலும், சில விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆன்லைன் முன்பதிவு, ஆதார் கட்டாயம் :

அதன்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முதல் 15 நிமிடங்களுக்குள்(Aadhaar Mandatory for Train Ticket Booking First 15 Minutes) ஆதார் விவரம் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யலாம். இந்த புதிய விதியானது அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை :

உண்மையான பயனாளர்கள் முன்பதிவு முறையில் பலன் பெறுவதற்காகவும், அங்கீகரிக்கப்படாத நபர்களால் நடைபெறும் முன்பதிவுகளை தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே முகவர்களுக்கான 10 நிமிட கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Diwali 2025 : ரயில் டிக்கெட் முன்பதிவு : நாளை (ஆக.17ல்) தொடக்கம்

பொது ரெயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தினமும் நள்ளிரவு 12.20 மணிக்குத் தொடங்கி இரவு 11.45 மணி வரை நீடிக்கும். ரெயிலில்(General Train Ticket Booking Timing) பயணம் செய்ய உள்ள நபருக்கு பயணம் செய்யும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு பொது டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in