
தீபத் திருநாளாம் தீபாவளி :
Diwali Special Train Ticket Booking Open Date 2025 : தீபத் திருநாளாம் தீபாவளி பணிடிகை என்றால் குதூகலத்திற்கும், கொண்டாடத்திற்கும் குறையே இருக்காது. புத்தாடை உடுத்தி, விதவிதமான திண்பண்டங்களை சுவைத்து, பட்டாசுகளை வெடித்து, உறவினர்களோடு கொண்டாடி மகிழும் பண்டிகைதான் தீபாவளி.
அக்டோபர் 20ம் தேதி தீபாவளி :
இந்த ஆண்டு தீபாவளி திருநாள் அக்டோபர் 20ம் தேதி(Diwali 2025 Date) வருகிறது. திங்கட்கிழமை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வோர் வெள்ளிக்கிழமை மாலையே புறப்பட்டுச் செல்வார்கள். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை, அதாவது ஆகஸ்டு 17ம் தேதி தொடங்குகிறது.
20 சதவீத கட்டண சலுகை :
வெளியூர்களில் உள்ள பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்னதாகவே திட்டமிடுவர். அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான சனி, ஞாயிற்றுக்கிழமையில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயற்சிப்பர். தொடர் பண்டிகையையொட்டி, அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 16ம் தேதி ரயிலில்(Diwali Train Ticket Booking Date) செல்ல விரும்புவோர் நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அக்டோபர் 17ம் தேதி ரயிலில் செல்வதற்கான முன்பதிவு ஆகஸ்டு 18ம் தேதி தொடங்குகிறது.
அக்டோபர் 20ம் தேதி தீபாவளியை கொண்டாடி விட்டு, அன்றைய தினமே ஊர் திரும்ப விரும்புவோருக்கான டிக்கெட் முன்பதிவு ஆகஸ்டு 21ம் தேதி தொடங்குகிறது.
60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க : பண்டிகை கால ரயில் டிக்கெட் முன்பதிவு : 20% அதிரடி தள்ளுபடி!
இதேபோன்று, அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்களை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும்.
=====