
மேக வெடிப்பால் கனமழை :
Heavy Rain Lashes North India : நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கடும் வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
புரட்டி எடுக்கும் பலத்த மழை :
உத்தர பிரதேச மாநிலத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டதை தாண்டி பாய்வதால், வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
5 நாட்களுக்கு கனமழை :
இந்தநிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம். ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மிக கனமழை பெய்யக் கூடும். பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் படிக்க : உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: வெள்ளப்பெருக்கால் பலத்த சேதம்
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை :
வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலமான கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இடுக்கி, திரிச்சூர், மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
=====
.