
உலக அரங்கில் இந்திய பிரதமர் :
PM Modi as India's 2nd Longest Prime Ministers List : இந்தியாவின் பிரதமர் பதவி என்பது உலக அளவில் சக்தி வாய்ந்த ஒரு அதிகார அமைப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச விவகாரங்களில் மத்திய பாஜக அரசு பின்பற்றும் சரியான அணுகு முறைகள்தான்.
இந்திரா காந்தி :
இந்தியாவின் பிரதமராக 1966ம் ஆண்டு ஜனவரி 24 முதல், 1977ம் ஆண்டு மார்ச் 24 வரை தொடர்ச்சியாக 4 ஆயிரத்து 077 நாட்கள் பதவி வகித்தவர் இந்திரா காந்தி(Indira Gandhi Serving Period). பெரும்பான்மையுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
முதலிடத்தில் நேரு :
முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு(Nehru 1st Longest PM Of India) 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக அந்தப் பதவியில் இருந்தார். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவே இல்லை. நேருவும், இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி :
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத பிரதமரில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் மற்றும் உயர் பதவியில் இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்து இருப்பவர் நரேந்திர மோடி(Narendra Modi).
இந்திரா காந்திக்கு பிறகு, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பிரதமர் மோடிதான். 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், 2014, 2019 மற்றும் 2024ல் மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, முதல் இடத்தில் உள்ளார்.
24 ஆண்டுகள் மோடி அரசாங்கம் :
அந்த வகையில் ஒரு மாநிலத்திலும், மத்தியிலும் 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழி நடத்திய மைல்கல்லை இன்று எட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி(PM Narendra Modi Service Year). பிரதமராக நேரு 16 ஆண்டுகள் இருந்த காலத்தில், காங்கிரசுக்கு மாற்றாக எதிர்க்கட்சி என்பதே இந்தியாவில் இல்லை. இந்திரா காந்தி காலத்தில் ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும், இப்போது இருப்பது போன்று மாநில கட்சிகளின் செல்வாக்கு அந்த அளவுக்கு இருந்தது இல்லை.
மேலும் படிக்க : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் : பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
சவால்களை முறியடிக்கும் மோடி :
வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் ஆளுமையில் தலையிடும் போக்கு, சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைப்பது, பொருளாதார சிக்கல்கள் என சவால்களுக்கு இடையே, 13 ஆண்டுகள் மாநில முதல்வர், 11 ஆண்டுகள் இந்திய பிரதமர் என சாதனையை தொடர்கிறார் நரேந்திர மோடி(PM Modi).
====