Delhi Blast : குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி : பிரதமர் திட்டவட்டம்

PM Narendran Modi on Delhi Car Blast : டெல்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் தப்ப முடியாது, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi said that Delhi Car blast Incident conspirators will not escape will brought to justice
Prime Minister Modi said that Delhi Car blast Incident conspirators will not escape will brought to justiceANI
1 min read

பிரதமர் மோடி வருத்தம்

PM Narendran Modi on Delhi Car Blast : இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் திம்புவில் நடந்த ஒரு நிகச்சியில் பேசுகையில், “இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் வேதனைப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் புரிகிறது. இன்று நாடே அவர்களுடன் நிற்கிறது.

சதிகாரர்கள் தப்ப முடியாது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவர் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்ப விடப்பட மாட்டார்கள்.

தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாளை அமைச்சரவை கூட்டம்

டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை(Delhi Car Blast Incident) தொடர்ந்து நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி நேரடியாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

முன்னதாக, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதியளித்தார்.

டெல்லி கார் வெடிப்பு - 13 பேர் பலி

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : டெல்லி கார் வெடிப்பு: மூளையாக செயல்பட்டாரா டாக்டர் உமர் முகமது?

மூளையாக செயல்பட்ட உமர் முகமது

திங்கள் கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவர் வெடிப்பு நிகழ்ந்த போது, காரில் இருந்தாரா? அல்லது முன்னதாக தப்பிச் சென்றாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in