
50% வரி - இந்தியாவை சீண்டும் அமெரிக்கா :
PM Narendra Modi Visit USA 2025 : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இதை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்து இருக்கிறார். 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்கர்கள் இந்திய பொருட்களை(US Tariffs on India) வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருநாட்டு வர்த்தகத்திலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டது. இருதரப்பு நல்லுறவும் சீர்கெட்டு வருகிறது.
செப்டம்பரில் அமெரிக்கா பயணம் :
இந்தச் சூழலில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. ஐநா பொதுச்சபை ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் செல்கிறார். செப்டம்பர் 23ம் தேதி(Modi Visit USA Date 2025) அமெரிக்கா செல்லும் மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச இருக்கிறார்.
வரி விதிப்பு பற்றி டிரம்புடன் பேச்சு :
இரு நாடுகளுக்கு இடையேயான வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களின் சந்திப்பு இந்தியா - அமெரிக்கா(India USA Relationship) நல்லுறவை சீர் செய்ய உதவும். குறிப்பாக வரி குறைப்பை அமெரிக்க செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
உலகளாவிய பிரச்சினைகள், மோடி கூடுதல் கவனம் :
மோடியின் உரை, உலகளாவிய பிரச்சனைகளான பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் பயணத்தின் மூலம், இந்தியாவின் புவிசார் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
மேலும் பார்க்க : PM Modi Visit : பிரதமர் மோடி சீனா பயணம் : ’அமெரிக்காவுக்கு செக்’
இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுமா? :
மோடி - டிரம்ப் சந்திப்பு(PM Modi Donald Trump Meet), 50 சதவீத வரி விதிப்பில் தளர்வு அல்லது புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம், இந்தியா-அமெரிக்கா உறவில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையலாம். 2030-க்குள் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு பிப்ரவரியில் மோடி-ட்ரம்ப் சந்திப்பின் போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
====