

பிகார் 2ம் கட்ட தேர்தல்
PM Modi Criticized Congress Faith on RJD : பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்டமாக வரும் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜேடியை எதிர்க்கும் காங்கிரஸ்
அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் - ஆர்ஜேடி பொருந்தாக் கூட்டணி என்று கூறிய பிரதமர், தேஜஸ்வியில் தேர்தல் அறிக்கையை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.
முதல்வர் வேட்பாளர் தட்டிப்பறிப்பு
தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இதுவரை பேசவில்லை என்று கூறிய அவர், ஆர்ஜேடியின் பொய் வாக்குறுதிகளை பிகார் மக்கள் நிராகரித்து விட்டதாக விமர்சித்தார். முதல்வர் வேட்பாளரை ஆர்ஜேடி வலுக்கட்டாயமாக காங்கிரசிடம் இருந்து தட்டிப் பறித்ததாகவும், கூட்டணிக்கு புகைச்சல் கிளம்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் என்டிஏ ஆட்சி தான்
அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், பிகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி தான் என்பது முதற்கட்ட வாக்குப்பதிவு நிருபித்து விட்டதாகவும் கூறினார். பிகாரில் காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தால், வளர்ச்சி நிறைந்த ஆட்சியை என்டிஏ தந்து வருவதாக மோடி தெரிவித்தார்.
14ம் தேதி வாக்கு எண்ணிக்கை
11ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை(Bihar Election 2025 Vote Counting Date) நடைபெறுகிறது. அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் என்டிஏ ஆட்சி!
முதற்கட்ட தேர்தலில் 73 ஆண்டுகளில் இல்லாத அளவு 64.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
=====================