
படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் :
PM Narendra Modi Celebrates Diwali 2025 with Indian Navy in Goa : : தீபத் திருநாளான தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 20ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் என தீபாவளி களை கட்டும். நாடு முழுவதும் தீபாவளியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் பிரதமராக 2014ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார் நரேந்திர மோடி.
கடற்படை வீரர்களுடன் தீபாவளி
அந்த வகையில் இந்த ஆண்டு 20ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார்.
இதன்மூலம் வீடுகளை, உற்றார் உறவினர்களை விட்டு விட்டு நாட்டை பாதுகாக்கும் அரிய பணியில் ஈடுபட்டு வரும் படை வீரர்களை உற்சாகப்படுத்துவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.
INS விக்ராந்த் கப்பலில் தீபாவளி கொண்டாட்டம்
கோவாவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு INS விக்ராந்த் போர்க் கப்பலில்(PM Modi Diwali 2025 in INS Vikrant), கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடி மகிழ இருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க : ஜெய்பூர் பேருந்து தீ விபத்தில் 20 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம்!
வீரர்களுடன் மோடி கொண்டாடிய தீபாவளி
கடந்த ஆண்டு குஜராத்தின் சர் கிரீக், 2023ல் ஹிமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா, 2022ல் கார்கில் போர் நினைவிடம், 2021ல் ஜம்மு காஷ்மீரின் நௌஷெரா ஆகிய இடங்களில் படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
=============