நீடிக்கும் போர் : "Team India"! மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

PM Narendra Modi Meeting With Chief Ministers Today : ஈரான் போரால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Prolonged war: Prime Minister Narendra Modi to hold important meeting with state Chief Ministers today
Prolonged war: Narendra Modi to hold important meeting with state Chief Ministers today google
1 min read

நீடிக்கும் போர்

PM Narendra Modi Meeting with Chief Ministers Today : தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் உலக நாடுகள் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடானது தழைத்தோங்கி உள்ளது.இதன் பல நாடுகளில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்ட்டுள்ளது

பிரதமர் ஆலோசனை

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் தட்டுப்பாடானது ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில், எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது

’டீம் இந்தியா- மத்திய அரசு ஆலோசனை

போர் சூழல் பாதிப்புகளின் தாக்கம் ,எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கையிருப்பு ,விநியோகம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

’டீம் இந்தியா’ என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும்.

மேலும் படிக்க :ஹோர்முஸ் நீரினை வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் பங்கேற்க இயலாது

இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள் அதாவது தமிழ்நாடு ,கேரளா.மேற்கு வங்கம் ,அசாம் ,புதுச்சேரி இதில் பங்கேற்க இயலாது.

இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த கூட்டத்தில் பங்கெடுத்து கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in