ஹோர்முஸ் நீரினை வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!

Iran allows 5 countries including India : ஈரான் அமெரிக்கா போர் காரணமாக முக்கிய நீரிணையான ஹோர்முஸ் வழித்தடம் மூடப்பட்டிருந்த நிலையில் ,தற்போது இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
Iran allows 5 countries including India to transit through Strait of Hormuz for Fuel Ship
Iran allows 5 countries including India to transit through Strait of Hormuz for Fuel Shipgoogle
1 min read

இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் கூறியிருப்பதாவது

Iran allows 5 countries including India : வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டுள்ளதாவது ஹோர்முஸ் நீரினை வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி

ஈரான் நட்பு நாடுகளாக கருதும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரினை வழியாக கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது .அதாவது சீனா, ரஷ்யா, இந்தியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையில் பயணிக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் எதிரி நாடுகள், இந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கியதுவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருக்கும். கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே என்பதால் இதன் வழியாக எரிபொருள் கப்பலை போக்குவரத்தை உலக நாடுகளை மேற்கொள்ளகின்றன

ஹோர்முஸ் நீரிணை மூடலும் உலகளாவிய பாதிப்பும்

ஹோர்முஸ் நீரிணை மூடல் விளைவின் காரணமாக பல துறைகளும் பாதிப்பை சந்தித்து வருகிறது .அந்த வகையில் எரிசக்தி சந்தைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் உலகளாவிய விநியோகச் உற்பத்தி ,ஏற்றுமதி சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க :ஹோர்முஸ் நீரினை : ”இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி” : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இதனால் அதிக எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் காரணமாக, உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in