ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : 5.5% ஆக RBI நீடிப்பு

RBI on Repo Rate 2025 August in India : வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Reserve Bank Governor Sanjay Malhotra announced RBI Repo Rate 2025 August in India
Reserve Bank Governor Sanjay Malhotra announced RBI Repo Rate 2025 August in India
1 min read

ரெப்போ வட்டி விகிதம் :

RBI on Repo Rate 2025 August in India : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன் அடிப்படையில் வட்டி விகிதம் பழைய நிலையில் தொடரும், அல்லது அதிகரிக்கப்படும். அதன் அடிப்படையில் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறுபடும்.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா(Sanjay Malhotra), ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்(RBI Monetary Policy Meet 2025) ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

வட்டி விகிதம் 5.50% :

உலக அளவிலான பொருளாதார சூழல், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, பணவீக்கம், ஜிடிபி(GDP) போன்றவற்றுக்கு மத்தியில் இந்த முடிவினை ரிசர்வ் வங்கி எடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி முதல் 3வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல்(Repo Rate 2025 Current) வவைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று விஜய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

மேலும் படிக்க : GST : ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் 1.96 லட்சம் கோடி : 7.5 சதவீதம் அதிகம்

கடன் வட்டிகளில் மாற்றம் இருக்காது :

இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள்(Repo Rate 2025 April) குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 50 அடிப்படை புள்ளிகள்(Repo Rate 2025 June) குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in