
இந்தியா மீது 50% வரி விதிப்பு :
Nikki Haley on US Tariffs on India : இந்தியா மீது 25% இறக்குமதி வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்டிம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில், கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நிக்கி ஹேலி எதிர்ப்பு :
தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் விலகிய நிக்கி ஹேலி, அமெரிக்க வரி விதிப்பு குறித்து வீக்(NewsWeek) இதழில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.
சீனாதான் அமெரிக்காவின் பகையாளி :
"சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்கு. அமெரிக்க - இந்திய உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்புவதைவிட இது மிக முக்கியம். அதேசயம், இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்கா நடத்த வேண்டும்.
சீனாவுக்கு மட்டும் சலுகையா? :
ரஷ்யாவிடம் இருந்து சீனா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், அமெரிக்காவின் வரி விதிப்பு என்ற சுழலில் சிக்கவில்லை. உண்மை இவ்வாறு இருக்க இந்தியாவை மட்டும் பாரபட்சமாக நடத்துவது எதற்காக?. இந்தியா உடனான உறவை சரிவில் இருந்து மீட்பதே அமெரிக்க வெளியுறவு கொள்கையில் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இந்தியாவை பகைப்பது ராஜதந்திர தோல்வி :
ஆசியாவில் சீன ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடு இந்தியா. கால் நூற்றாண்டாக இந்தியாவுடன் இருக்கும் நெருக்கத்தை அமெரிக்கா முறிப்பது என்பது ராஜதந்திர பேரழிவாகவே இருக்கும். ஜவுளி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள் போன்ற துறைகளில் அதிக அளவில் உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் நாடு இந்தியா. இவற்றை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை அமெரிக்கா கைவிட இந்தியாவின் நட்பு முக்கியம்.
உலகின் மிகப்பெரிய சொத்து இந்தியா :
பாதுகாப்புத் துறையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு விரிவடைந்து வருகிறது. இதன்மூலம், சுதந்திர உலகின் மிக முக்கிய சொத்தாக இந்தியா திகழ்ந்து வருகிறது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் வர்த்தக பாதைகளில் இந்தியாவுக்கு இருக்கும் இடம் ஆகியவை அந்நாட்டை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாற்றியது.
மேலும் படிக்க : இந்தியாவுடனான நல்லுறவை கெடுக்காதீங்க! : டிரம்பை எச்சரித்த செனட்டர்
இந்தியாவுக்கு மதிப்பு கொடுங்க
இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு செயல்படுவது நமது நாட்டு மக்களுக்கு நன்மையை தேடித் தரும். வீம்புடன் வரி விதிப்பது, நமது பின்னடைவை தான் ஏற்படுத்தும்” இவ்வாறு நிக்கி ஹேலி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
================