
நெருக்கடி கொடுக்கும் டொனால்டு டிரம்ப் :
Senator Gregory Meeks on Donald Trump : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி போர் மூலம் மிரட்டி வருகிறார். முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், அதை 50 சதவீதமாக உயர்த்தி தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா - அமெரிக்கா உறவு பாதிப்பு :
டிரம்பின் மோசமான நடவடிக்கை காரணமாக இந்தியா - அமெரிக்கா(US India Relationship) உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. பாகிஸ்தானின் ஆதரவு நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தால், இந்தியாவுடனான நல்லுறவை முழுமையாக சீர்குலைந்து போகும் என்பதில் ஐயமில்லை.
டிரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு :
டிரம்பின் செயல் நியாயமற்றது என அவரது கட்சியான குடியரசு கட்சி கருத்து தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்பிக்களும், டிரம்பை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
அமெரிக்க செனட்டர் போர்க்கொடி :
இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பை, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டரும், மூத்த காங்கிரஸ் உறுப்பினருமான க்ரிகோரி மீக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.”டிரம்பின் இந்த வரி விதிப்பு பிடிவாதம் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 20 ஆண்டுகளாக கவனமாக கட்டமைக்கப்பட்ட வலுவான உறவை பாதிக்கும்.
மேலும் படிக்க : இந்தியாவின் உறவுக்கு தீயிடுவதா? : டிரம்பை எதிர்க்கும் நிக்கி ஹேலி
மரியாதை குறைவாக நடக்க கூடாது :
இருநாடுகளுக்கு இடையே ஆழமான பொருளாதார உறவுகள் உள்ளன. எந்த பிரச்சினையும் இரு தரப்புக்கும் மரியாதை குறைவை ஏற்படுத்தாத வகையில் தீர்க்கப்பட வேண்டும். இருநாட்டு மக்களிடையே நீடிக்கும் நட்பு, ஜனநாயக நெறிமுறைகளை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்” இவ்வாறு செனட்டர் க்ரிகோரி மீக்ஸ் அதிபர் டிரம்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
=====