Bihar Election: முடிவுக்கு வராத உடன்பாடு: திணறும் இந்தியா கூட்டணி

RJD vs Congress INDIA Alliance Seat Sharing in Bihar Assembly Election 2025 : பிகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இன்னும் நிறைவடையாததால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
RJD vs Congress INDIA Alliance Seat Sharing in Bihar Assembly Election 2025 Latest News in Tamil
RJD vs Congress INDIA Alliance Seat Sharing in Bihar Assembly Election 2025 Latest News in Tamil
1 min read

பிகார் சட்டசபை தேர்தல் 2025 :

RJD vs Congress INDIA Alliance Seat Sharing in Bihar Assembly Election 2025 : பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில், 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, முதற்கட்ட தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். முதல் கட்டமாக நவம்பவர் 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு நிறைவு பெறுகிறது.

இந்தியா கூட்டணியில் இழுபறி

எதிர் கூட்டணியான மகாகத்பந்தனில் இன்று வரை தொகுதி பங்கீடு முடிவடையாமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் தொலைபேசியில் பேசினர் இருந்தபோதும், இன்னும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க : பாஜகவில் இணைந்து அலிநகர் தொகுதியில் களமிறங்கும் பிரபல பாடகி!

போட்டி போட்டு மனுத்தாக்கல்

கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசிக்கொண்டிருக்க, நாளையோடு (17ஆம் தேதி) முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு முடிவகிறது. பல தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுதாக்கல் செய்து விட்டு, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்துக் கிடக்கின்றனர். இதன் காரணமாக வாக்குப்பதிவுக்குள் இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும், இது வெற்றியை பாதித்து, என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in