RJD: 25 இடங்களில் தான் வெற்றி ஆனால்! : வாக்கு சதவீதத்தில் முதலிடம்

Bihar Assembly Election 2025 Vote Percentage : பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஆர்ஜேடி, வாக்கு சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
RJD, which got third place in Bihar Assembly elections 2025, has topped in vote percentage
RJD, which got third place in Bihar Assembly elections 2025, has topped in vote percentageGoogle
1 min read

பிகார் தேர்தல் முடிவுகள்

Bihar Assembly Election 2025 Vote Percentage : பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மகாகத்பந்தன் - 35 தொகுதிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட்ட மகா கூட்டணி 35 தொகுதிளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், ஆர்ஜேடி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஐ(எம்எல்) 2 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

கட்சிகள் பெற்ற வாக்குகள் :

சட்டப்பேரவை தேர்தல் வெற்றியில் சென்றமுறை முதலிடத்தில் இருந்த ஆர்ஜேடி இம்முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எனினும், வாக்கு சதவீதத்தில் அந்தக் கட்சி முதலிடம் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆர்ஜேடி 23% வாக்குகளை பெற்றுள்ளது.

பாஜக 20.08 % வாக்குகள்

89 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக இரண்டாம் இடம் பிடித், 20.08% வாக்குகளை பெற்று இருக்கிறது.

ஜேடியு 3வது இடம்

85 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் ஜேடியு, வாக்கு சதவீதத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அந்தக் கட்சிக்கு 19.25% வாக்குகளை பெற்றுள்ளது.

காங்கிரஸ் 8.71 %

ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 8.71% வாக்குகளையும், 19 இடங்களை கைப்பற்றிய சிராஜ் பாஸ்வான் கட்சி 4.97% வாக்குகளையும், 5 இடங்களில் வென்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 1.85% வாக்குகளையும் பெற்றுள்ளன.

கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவீதங்கள் வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு கட்சிக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்து இருந்தாலும், தொகுதிகள், வேட்பாளர்களை பொருத்தே தேர்தல் முடிவு அமைகிறது என்பதை இது வெளிப்படுத்தி உள்ளது.

----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in