
சர்வதேச விண்வெளி மையம் :
Shubhanshu Shukla Return To Earth : அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாணத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம்(Dragon Spacecraft) மூலம், ஆக்சியம் மிஷன் 4 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
14 நாட்கள் தங்கி இருக்கும் வகையில் அவர்களின் பயணம் திட்டமிடப்பட்டது. நான்கு பேரும் சர்வதேச விண்வெளை மையத்தில் பல்வேறு முக்கிய ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
விண்வெளி விவசாயியான சுபான்ஷூ :
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாகவே மாறி விட்டார். அங்கு அவர், வெந்தயம், பச்சை பயிறு வளர்த்தார். இந்த நாற்றுகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டு, இவற்றில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது ஆராயப்படும்.
மேலும் படிக்க : விண்வெளி மையத்தில் பாசிப்பயறு,வெந்தய விதைகள் : பயிராகும் அதிசயம்
பூமிக்கு புறப்பட்ட ட்ராகன் :
ஒப்படைக்கப்பட்ட அனைத்து ஆய்வுகளையும் நான்கு வீரர்களும் வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்தநிலையில், திட்டமிட்டபடி அவர்கள் இன்று பூமிக்கு புறப்பட்டன. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம்(Dragon Spacecraft) இந்திய நேரப்படி இன்று மாலை 4.36 மணிக்கு புறப்பட இருந்தது. சிறிது கால தாமதத்திற்கு பிறகு, நான்கு விண்வெளி வீரர்களுடன் ட்ராகன் தனது பயத்ணதை வெற்றிகரமாக தொடங்கியது.
இந்நிலையில் இன்று (ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா(Shubhanshu Shukla) உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் சென்றுள்ளனர்.
நாளை பூமியில் கால் பதிக்கும் சுபான்ஷூ :
ட்ராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பிறகு, நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை(Indian Astronaut) வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை :
இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்று திரும்பியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதை முறியடித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் பயணம் மேற்கொண்டது மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி மையத்திற்கும் சென்றார். அந்த வகையில், விண்வெளி மையத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருக்கிறது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
ககன்யான் திட்டம் :
ககன்யான் திட்டத்தில் தீவிரம் காட்டி வரும் இந்தியா, எதிர்காலத்தில் தனக்கென விண்வெளியில் மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியும் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
=====