
திருப்பதி பிரம்மோற்சவம் :
TTD Tirupati Tirumala Brahmotsavam Dates 2025 : 2025ம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்திற்காக, பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம்(TTD Brahmotsavam 2025 Date) தொடங்குகிறது. அக்டோபர் 2-ம் தேதி வரை கோலாகலமாக விழா நடைபெற உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 24ம் தேதி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குவார். இதையடுத்து, அன்று மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
ரூ.3.5 கோடி, 60 டன் மலர் அலங்காரம் :
அடுத்த தினம், திருமலையில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளை முதல்வர் திறந்து வைப்பார். மின் விளக்குகளால் திருமலையை அழகுபடுத்த ரூ.5.5 கோடியும், மலர் அலங்காரத்துக்காக ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60 டன் மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்ட இருக்கின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து திறமையான கலைஞர்கள் திருப்பதிக்கு(Tirupati Temple) வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் :
நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்காக 3,500 தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருமலையில் 36 எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் பிரம்மோற்சவ விழா(Tirupati Brahmotsavam Darshan Ticket) பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட் கருட சேவையன்று தவிர, நாள் ஒன்றுக்கு 1.16 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், மற்றும் 25 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
தினமும் 8 லட்சம் லட்டுகள் விநியோகம் :
சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டு, விஐபி பிரேக் தரிசன முறை ரத்து(VIP Darshan in Tirumala) செய்யப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்களும், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன. 20 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு 14 வகையான உணவுகள் :
கருட சேவையன்று மாட வீதிகளில் வாகன சேவையை காண திரண்டிருக்கும் பக்தர்களுக்கு 14 வகையான உணவுகளை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாள் அன்னதான சத்திரத்தில் இலவச அன்னதானம் வழங்கப்படும்(TTD Brahmotsavam Foods). தினமும் 1,900 தடவை திருமலை-திருப்பதி இடையே ஆந்திர அரசு பேருந்துகள் இயக்கப்படும். கருட சேவையான 28-ம் தேதி 3,200 தடவைகள் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு பிரமாண்ட ஏற்பாடுகளுடன் திருப்பதி பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. பூலோக வைகுண்டமான திருமலையில் நடைபெறும் இந்த வைபவத்தை 9 நாட்களும் நேரில் காண முடியாவிட்டாலும், TTD தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டு பெருமாளை சேவிக்கலாம்.
பிரம்மோற்சவ விழா அட்டவணை(TTD Brahmotsavam Dates 2025 Schedule) :
செப்டம்பர் 24 - மாலையில் கொடியேற்றம்
செப்டம்பர் 25 - காலையில் சின்ன சேஷ வாகனம், மாலை ஹம்ச வாகனம்
செப்டம்பர் 26 - காலையில் சிம்ம வாகனம், மாலை முத்துபல்லக்கு வாகனம்
செப்டம்பர் 27 - காலை கற்பவிருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம்
செப்டம்பர் 28 - மோகினி அவதாரம், மாலை கருட சேவை
செப்டம்பர் 29 - அனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு கஜ வாகனம்
மேலும் படிக்க : திருப்பதியில் செப்.24 முதல் பிரம்மோற்சவம் : 28ம் தேதி ’கருடசேவை’
செப்டம்பர் 30 - காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம்
அக்டோபர் 01 - காலை ரத உற்சவம், மாலை அஸ்வ வாகனம்
அக்டோபர் 02 - சக்ர ஸ்நானனம், அன்றிரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு
=============