புதிய உச்சத்தில் தங்கம் சவரன் ரூ.82,240: வெள்ளி கிலோ ரூ,1,44,000

Today Gold Rate in Chennai : தங்கத்தின் விலை முதன்முறையாக சவரன் 82,000ஐ தாண்டி, வரலாறு படைத்து இருக்கிறது.
Today Gold Rate in Chennai
Today Gold Rate in Chennai
1 min read

தங்கத்தை குவிக்கும் உலக நாடுகள் :

Today Gold Rate in New High : அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளும் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிப்பதால், அதன் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் புதிய உச்சம், சவரன் ரூ.82,240 :

அந்த வகையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின்(Gold Rate Today in Chennai) விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை ரூ.82 ஆயிரத்தை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

16 நாட்களில் ரூ. 4,600 அதிகரிப்பு :

செப்டம்பர் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் 9,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று அதன் விலை ரூ.10,280. அப்படி என்றால், 16 நாட்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு 575 ரூபாயும், சவரனுக்கு 4,600 ரூபாயும் விலை(Gold Price Changes in September Month) உயர்ந்திருக்கிறது.

சவரன் ரூ.82,240 என்ற விலையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சாதாரண மக்கள் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால், செய்கூலி செய்தாரம் ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்த்தால் சவரனுக்கு 95 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

வெள்ளி விலை கிராம் ரூ.144 :

வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியிலும் முதலீடு செய்வது அதிகரித்து வருவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதன்படி,

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை(Today Silver Rate) கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.144க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க : Gold Rate : 82,000-ஐ நெருங்கியது தங்கம் : புதிய உச்சத்தில் வெள்ளி

கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

15.09.2025 - ஒரு சவரன் - ரூ.81,680

14.09.2025 - ஒரு சவரன் - ரூ.81,760

13.09.2025 - ஒரு சவரன் - ரூ.81,760

12.09.2025 - ஒரு சவரன் - ரூ.81,920

11.09.2025 - ஒரு சவரன் - ரூ.81,200

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in