
கிடுகிடுவென உயரும் தங்கம் விலை :
Gold Silver Rate Today in Tamil Nadu : தங்கம் விலை கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 29ம் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 4ம் முதன்முறையாக ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது. போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தில் அதிக முதலீடு செய்யும் உலக நாடுகள் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறையாமல் உள்ளது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை :
இந்தநிலையில், தங்கம் விலை இன்றும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10,150க்கு விற்பனை ஆனது(Yesterday Gold Rate). சவரன் ரூ.81,200க்கு விற்கப்பட்டது.
82,000ஐ நெருங்கியது தங்கம் :
இன்று கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,920க்கு விற்பனையாகிறது(Gold Rate Today). இதே ஏற்றம் நீடித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உச்சம் தொட்ட வெள்ளி விலை :
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையிலும் நாள்தோறும் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டு வருகிறது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142க்கு விற்பனை செய்யப்படுகிறது(Silver Rate Today). கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 42 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் :
12-09-2025 - ₹10,240
11-09-2025 - ₹10,150
10-09-2025 - ₹10,150
09-09-2025 - ₹10,150
08-09-2025 - ₹10,060
07-09-2025 - ₹10,005
06-09-2025 - ₹10,005
05-09-2025 - ₹10,762
04-09-2025 - ₹10,686
03-09-2025 - ₹9,805
மேலும் படிக்க : Today Gold Rate : புதிய உச்சத்தில் தங்கம் : ஒரு சவரன் ரூ. 81,200
============