
ஏற்ற இறக்கத்தில் தங்கம் :
Gold Rate Today in Chennai : உலகளவில் சந்தை நிலவரம், பொருளாதார நிலைமை, கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றை கொண்டு, ஆபரணத் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிரடியாக விலையில் ஏற்றம் கண்டு வந்தாலும் தங்கத்தை வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.
ஆபரண தங்கம் விலை சரிவு :
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 7 நாட்களில் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு சவரன் ரூ.75,000ஐ கடந்ததால் தங்கம் விலை அதன் பின்னரும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்துள்ளது.
ஆகஸ்டு 9ம் தேதி புதிய உச்சம் :
ஆகஸ்டு 9ம் தேதி ஒரு சவரன் ரூ.75,560 ஆக விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் அடுத்து வந்த நாட்கள் தங்கம் விலையில் இறங்குமுகத்தில் உள்ளது.
ஒரு வாரமாக விலை சரிவு :
தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.74,200 ஆக உள்ளது. அதன்படி ஒருவாரத்தில் சவரனுக்கு ரூ.1360 சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கிராமுக்க ரூ.5 குறைந்து ரூ.9275 ஆக விற்கப்படுகிறது.
மேலும் படிக்க : தங்கம் விலை தொடர் சரிவு : ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை
சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருவதால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
=========