
US President Donald Trump on Indian Economy : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், நமது நாட்டு பொருட்கள் மீது 25 சதவீத வரியை விதித்து இருக்கிறார். கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தா விட்டால், வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.
இந்திய பொருளாதாரம் - உளறிய ட்ரம்ப் :
'இந்தியாவின் பொருளாதாரம் இறந்து போய்விட்டது' என்று டோனால்ட் டிரம்ப்(Donald Trump) விமர்சித்தது, தொழில்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால், உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோதும், இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கி, ஐ.எம்.எப்., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாராட்டின. உண்மை இவ்வாறு இருக்க, வரலாறு தெரியாமல் பேசிய டோனால்ட் டிரம்ப் விமர்சனத்திற்கு ஆளானார்.
ட்ரம்ப் டவர்ஸ் - கூடுதல் லாபம் :
இந்திய பொருளாதாரம் பற்றி டோனால்ட் டிரம்ப் கூறியது அப்பட்டமான பொய் என்பதற்கு, இந்தியாவில் அவரது நிறுவனங்களின் முன்னேற்றமே சாட்சியாக உள்ளன. இந்திய கட்டுமானத்துறையில் ’ட்ரம்ப் டவர்ஸ்’ { Trump Towers ) நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடந்தாண்டு அதாவது அதிபராக டோனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கும் முன்பு அவரது நிறுவனம் இந்தியாவில் ரூ.175 கோடி வருமானம் ஈட்டியிருந்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக இந்த நிறுவனம் தனது செயல்பாட்டில் அசுர வேகத்தை காட்டி வருகிறது.
இந்தியாவில் அசுர வளர்ச்சி :
த்ரிபேகா என்ற கட்டுமான நிறுவனத்திடம் கைகோர்த்து குர்கான் பகுதியில் 6 கட்டுமான திட்டங்களை கையகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்திய கட்டுமானத் துறையில் டோனால்ட் டிரம்ப் நிறுவனம்(Donald Trump Towers) 2011ல் கால் பதித்தது. கடந்தாண்டு வரை 3 மில்லியன் சதுர அடி மட்டுமே கட்டிய இந்த நிறுவனம்,ஓராண்டில் மட்டும் 11 மில்லியன் சதுர அடியாக தனது கட்டுமானத்தை அதிகரித்து இருக்கிறது.
இது மூன்று வளர்ச்சியாகும். புதிய திட்டங்கள் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை வாய்ப்புகள் டோனால்ட் டிரம்ப் நிறுவனத்துக்கு இந்தியாவில் உருவாகி உள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது அபார வளர்ச்சி என்கின்றனர் கட்டுமான வல்லுநர்கள்.
வேகமான வளர்ச்சியில் இந்தியா :
இதன்மூலம், உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா இருப்பதும், எந்தவித பொருளாதார ஏற்ற, இறக்கங்களில் கட்டுமானத் துறை சிக்கிக் கொள்ளாததே இதற்கு காரணம் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் ட்ரம்ப் நிறுவனத்தின் கட்டுமானங்கள் :
மொத்தம் 6 திட்டங்களில் 2 திட்டங்கள் முழுமை பெற்றுவிட்டன. புனேவில் 23 மாடிகள் கொண்ட டிரம்ப் டவர்(Trump Tower in Mumbai) என்ற அடுக்குமாடி வளாகம் (இதன் மதிப்பீடு ரூ.300 கோடி, 4 லட்சம் சதுர அடி) கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
மும்பையில் ரூ.3000 கோடியில் 76 மாடிகள் கொண்ட கட்டடம் (உத்தேசமாக 9 லட்சம் சதுர அடி) கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
கொல்கத்தாவில்(Trump Tower in Kolkata) ரூ.400 கோடியில் 4 லட்சம் சதுர அடியிலும், குர்கானில் ரூ.1900 கோடியில் 12 லட்சம் சதுர அடியிலும் செயல்பாட்டில் இருக்கும் கட்டுமானங்கள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.
மேலும் படிக்க : PM Modi Visit : பிரதமர் மோடி சீனா பயணம் : ’அமெரிக்காவுக்கு செக்’
எனவே, இந்திய பொருளாதாரம் செத்து விட்டதாக கதை விட்ட அதிபர் ட்ரம்பின் பேச்சை அவரது நிறுவனமே உடைத்து காட்டி இருக்கிறது. இதன் காரணமாக உலக அரங்கில் மூக்குடைக்கப்பட்டு நிற்கிறார் டோனால்ட் டிரம்ப்.
-------