UPI புதிய சாதனை : ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை

UPI Transaction August 2025 in India : இந்​தி​யா​வில் யுபிஐ வரலாற்​றில் முதல் ​முறை​யாக ஆகஸ்ட் மாதம் 20 பில்லியன் அளவுக்கு பரிவர்த்​தனை​ நடை​பெற்​று, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
UPI Transaction August 2025 in India
UPI Transaction August 2025 in India
1 min read

டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகும் ஆதரவு :

National Payments Corporation of India : நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வழங்கும் தொகை நேரடியாக கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செல்வதால், இந்த முறையில் பணத்தை அனுப்புவது,பெறுவது இருதரப்புக்கும் எளிதாக இருக்கிறது.

சாதாரண கடைகள் முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து பகுதிகளில் யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும் மிக எளிதாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள்.

யுபிஐ பரிவர்த்தனை புதிய சாதனை :

இந்தியாவில் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தேசிய பேமென்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தியா (NPCI) வெளியிட்டு இருக்கிறது. அதன்​படி யுபிஐ பரிவர்த்​தனை முதல்​முறை​யாக ஆகஸ்ட் மாதம் 20.01 பில்​லியனை எட்​டியது(UPI Transaction August 2025 in India). இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்​லியன்) 2.8% அதி​கம் ஆகும்.

ரூ.24.85 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை :

யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்​சம் கோடி மதிப்​புள்ள பரிவர்த்​தனை​கள்(UPI Transaction August 2025 Amount) நடந்​துள்​ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்​தனை 645 மில்​லிய​னாக (ஜூலை​யில் 628 மில்​லியன்) உயர்ந்​துள்​ளது.

ஒரே நாளில் 70 கோடி முறை பரிவர்த்தனை :

சராசரியாக தினசரி பரிவர்த்​தனை மதிப்பு ரூ.80,177 கோடி​யாக இருந்​தது. யுபிஐ கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மட்டும் 70 கோடி முறைக்கும்(UPI Transaction Per Day) அதிகமாக யுபிஐ பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடிக்கும் அதிகமான முறை பணப் பரிமாற்றம் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க : ஒரே நாளில் 70.7 கோடி பரிவர்த்தனை : புதிய உச்சம், UPI சாதனை

பாரத ஸ்டேட் வங்​கி​யின் சமீபத்​திய ஆய்​வின்​படி கடந்த ஜூலை​யில் டிஜிட்​டல் பணம் செலுத்​து​வ​தில் மகா​ராஷ்டிரா 9.8 சதவீத பங்​களிப்​புடன் முதல் இடத்​தில் இருந்​தது. அதைத் தொடர்ந்து கர்​நாடகா 5.5 சதவீதம், உத்​தரபிரதேசம் 5.3 சதவீதம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in