ஈரான் இஸ்ரேல் போர் : முட்டை ஏற்றுமதி பாதிப்பை தொடர்ந்து, பாசுமதி அரிசி ஏற்றுமதியும் தடைபட்டது

US Israel Iran War Impact on India Exports : தொடர் போர் நீடிப்பால் உலகளவில் வணிகத்தில் பெரும் பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாசுமதி அரிசி ஏற்றுமதியும் கடும் சரிவை சந்தித்துள்ளது
ongoing war caused a major disruption to global trade. In this regard, basmati rice exports suffered a sharp decline.
ongoing war caused a major disruption to global trade. In this regard, basmati rice exports suffered a sharp decline. google
1 min read

ஈரான்-இஸ்ரேல் போர் : தினமும் 5 கோடி இழப்பை சந்திக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் நீடித்து வரும் போர்

US Israel Iran War Impact on India Exports : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) வெளியிட்ட அறிக்கையின்படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள

தொடர்ந்து சரிவை சந்திக்கும் வணிகம்

நீடித்து வரும் போர் காரணமாக பல்வேறு வகையான பொருட்களுக்கு ஏற்றுமதியானது பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிஆகி வெளிநாடுகளுக்கு சென்ற கப்பல்களும் தொடர் போரால் இடையிலே நின்று கொண்டு இருக்கிறது.

பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு

தொடர் இஸ்​ரேல், ஈரான் இடையி​லான போர் காரண​மாக, மத்​திய கிழக்கு நாடு​களுக்​கான கப்​பல் போக்​கு​வரத்து ரத்து செய்யப்​பட்​டுள்​ள​நிலையில் துறை​முகங்​களில் 2 லட்​சம் மற்றும் நடு​ வழி​யில் 2 லட்​சம் என மொத்​தம் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் படிக்க :ஈரான்-இஸ்ரேல் போர் : தினமும் 5 கோடி இழப்பை சந்திக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள்

உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம்

நீடித்து வரும் போர் சூழல் காரணமாக வளை​குடா நாடு​களுக்​குச் செல்​லும் கப்​பல்​களுக்​கான காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் போர்க்​கால கூடு​தல் கட்​ட​ணங்​கள் கணிச​மாக உயர்ந்துள்ளது.

இதனால் சர்​வ​தேச சரக்கு போக்​கு​வரத்து கட்​ட​ணம் 15-20% வரை அதி​கரித்​துள்ளது. மேலும் கப்​பல் எரிபொருள் விலை ஒரு டன்​னுக்கு 520 டாலரிலிருந்து 580 டால​ராக உயர்ந்​துள்​ளது.

ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு

தொடர் போர் பதற்ற சூழலால் 2 மணி நேரத்​தில் பாசுமதி அரிசி​யின் விலை 7-10% வரை சரிவை சந்தித்துள்ளது . இது ஏற்​றும​தி​யாளர்​களின் நடை​முறை மூலதனத்​தில் பெரும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

போர் பதற்​றம் காரண​மாக கப்​பல்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால் துறை​முகங்​களில் தேங்​கும் சரக்​கு​களுக்​கான சேமிப்பு மற்​றும் தாமதக் கட்​ட​ணங்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும் எண்டு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவிர்க்க முடி​யாத சூழலாக’ அறிவிக்க வேண்​டும்.

வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற கப்பல்கள் இடையில் நின்று கொண்டிருக்கிறது .இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

பாதி​யில் நிற்​கும் சரக்​கு​களைத் திருப்பி அனுப்ப அல்​லது வேறு இடத்​துக்கு மாற்ற இந்த நெருக்​கடியை ஒரு ‘தவிர்க்க முடி​யாத சூழலாக’ அறிவிக்க வேண்​டும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க :7வது நாளாக தொடரும் போர் : நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம், ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பு

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in