Donald Trump New US Tariffs on Imported Goods List in India
Donald Trump New US Tariffs on Imported Goods List in India

US Tariff : மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு : டிரம்ப் அதிரடி

US Tariffs on Imported Goods List in India: இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25% வரி விதித்து மீண்டும் அதிரடி காட்டி இருக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
Published on

வரி விதிப்பில் அதிரடி :

US Tariffs on Imported Goods List in India : அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்து கூடுதல் வரி விதிப்பு, விசா கெடுபிடிகள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடுகள் என தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏற்கனவே இந்தியா மீது 50 சதவீத வரி(US Tariffs on India) உட்பட பல்வேறு நாடுகளின் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

மருந்துகளுக்கு 100 % வரி :

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இறக்குமதி செய்யப்படும் மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் கடுமையான வரிகளை விதித்து இருக்கிறார் டோனால்ட் டிரம்ப். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கமான ட்ரூத்-ல் அவர் கூறியிருப்பதாவது, “அக்டோபர் 1ம் தேதி முதல் மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி(US Tariff on Imported Medicines) விதிக்கப்படும். எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் இது பொருந்தும்.

அமெரிக்காவில் மட்டுமே தயாரிக்க வேண்டும் :

ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவில்லை என்றால், வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால் இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது.

சமையலறை உபகரணங்களுக்கும் வரி :

அதேபோன்று, அக்டோபர் 1ம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும்(US Tariff on Imported Furnitures), கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியும் விதிக்கப்படும்.

இந்தியாவில் இருந்து மருந்துகள் ஏற்றுமதி :

இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில், இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக(Import Duty on Medicines in India) அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு $3.6 பில்லியன் (ரூ. 31,626 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது.

மேலும் படிக்க : USA 50% வரி விதிப்பு : ரூ.2,500 கோடிக்கு தங்க ஏற்றுமதி பாதிப்பு

இந்தியாவுக்கு பாதிப்பு - எச்சரிக்கை

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் $3.7 பில்லியன் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. டோனால்ட் டிரம்பின்(Donald Trump New Tariffs on India) புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in