USA 5.5 கோடி விசாக்கள் மதிப்பாய்வு : 50 லட்சம் இந்தியர்கள் கதி?

Donald Trump on USA Foreign Visa Review Update : அமெரிக்காவில் 5.5 கோடி வெளிநாட்டிவரின் விசாக்களை மதிப்பாய்வு செய்ய அதிபர் டோனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
US President Donald Trump Order To Review USA Foreign Visa Renewal Update
US President Donald Trump Order To Review USA Foreign Visa Renewal Update
1 min read

வேலை தேடி அமெரிக்கா பயணம் :

Donald Trump on USA Foreign Visa Review Update : வேலை தேடி பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் அமெரிக்காவில் ஆண்டு தோறும் குடியேறுகின்றனர். சிலர் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெற்று அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்கள் அமெரிக்க குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் 12.8 மில்லியன் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும் 3.6 மில்லியன் தற்காலிக விசா(Visa) வைத்திருப்பவர்களும் வசிக்கின்றனர்.

விசாக்கள் மதிப்பாய்வு :

இவர்களில் ஐந்தரை கோடி பேரின் விசாக்களை(55 Million US Visa Review) மதிப்பாய்வு செய்ய அதிபர் டோனால்ட் டிரம்ப்(Donlad Trump) உத்தரவிட்டு இருக்கிறார். இதன் மூலம் அனைத்து விசாக்களும் பரிசோதிக்கப்படும். ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படலாம், மேலும் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.

விசாக்கள் மதிப்பாய்வு செய்யும் முறை :

சுற்றுலா, மாணவர்கள், தொழில் முறை பயணமாக தங்கி இருப்போரின் விசாக்கள் ஆய்வு(US VISA Validation Process) செய்யப்படும். அமெரிக்காவில் வசிக்க அவர்களுக்கு அடிப்படை தகுதி இருக்கிறதா? விசா முடிந்த பிறகு அமெரிக்காவில் வசிக்கிறார்களா? குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்களா? தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும்.

50 லட்சம் இந்தியர்கள் :

இந்தியாவை சேர்ந்த 50 லட்சம் பேர் அமெரிக்காவில் குடியுரிமை அல்லாத விசாக்களை(Indian US Visa) வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவற்றில் பி1 \ பி2 பார்வையாளர் விசா(b1 b2 visa usa), எஃப் 1 மாணவர்கள் விசா, எச்ஃபி வேலை விசாக்கள் அடங்கும். இவர்களின் விசாக்களும் பரிசீலிக்கப்படும். அவற்றில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது.

மேலும் படிக்க : இந்தியாவை மதிப்புமிக்க கூட்டாளியாக நடத்துங்க : டிரம்புக்கு அறிவுரை

பல லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் :

அதிபர் டிரம்பின் இந்த உத்தரவு பல லட்சம் பேரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், குடியேற்றம் இல்லாத விசாக்கள் மூலம் அமெரிக்காவில்(America Visa Review) வசிப்போர், அச்சம் அடைந்துள்ளனர். வரி விதிப்பு போரை தொடர்ந்து, வெளிநாட்டவரை வெளியேற்றும் முனைப்புடன் அதிபர் டிரம்ப் செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in