இந்தியாவின் உறவுக்கு தீயிடுவதா? : டிரம்பை எதிர்க்கும் நிக்கி ஹேலி

Nikki Haley on Donald Trump Tariffs on India : சீனாவை விட்டு இந்தியாவுடனான நல்லுறவை கெடுப்பதா? என்று அதிபர் டிரம்புக்கு அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
Nikki Haley on Donald Trump Tariffs on India
Nikki Haley on Donald Trump Tariffs on India
1 min read

இந்தியாவை பார்த்து டிரம்பிற்கு அச்சம் :

Nikki Haley on Donald Trump Tariffs on India : இந்திய பொருட்கள் மீது முதலில் 25 சதவீத வரி விதித்த அதிபர் டோனால்ட் டிரம்ப், அதை 50 சதவீதமாக மாற்றி இருக்கிறார். ரஷ்யாவுடனான இந்தியாவின் நல்லுறவை அவரது கடுப்பிற்கு முக்கிய காரணம். மேலும், இந்தியாவின் எஸ்-500 ஏவுகணையும் அதன் திறனும், அவரது கண்ணை உறுத்துகிறது. எனவே, வரி போர் மூலம் இந்தியாவை பணிய வைக்க அவர் முயற்சிக்கிறார். ஆனால், இது போன்ற மிரட்டல்களுக்கு இந்தியா பணிய போவதே இல்லை.

சொந்த கட்சியில் டிரம்பிற்கு எதிர்ப்பு :

இந்தநிலையில், இந்தியாவிற்கு எதிரான டிரம்பின் முடிவுக்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. டிரம்பின் திட்டத்தை ஐநா சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி(Nikki Haley) கடுமையாக சாடி இருக்கிறார்.

இந்தியாவின் ஆதரவாளர் நிக்கி ஹேலி :

குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நிக்கி ஹேலி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை(US India Relationship) நிக்கி ஹேலி நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மை அவசியம் என்பது அவரது உறுதியான நம்பிக்கை.

எதிரிக்கு சலுகை, நண்பனுக்கு வரியா? :

அந்த வகையில், சீனா போன்ற எதிரி நாட்டிற்கு சலுகைகளை வழங்க வேண்டாம், இந்தியா போன்ற நட்பு நாடுடனான உறவைக் கெடுக்க வேண்டாம் என்றும் டிரம்பை அவர் எச்சரித்தார். டிரம்ப் நிர்வாகம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக நிக்கி ஹேலி குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க : இந்தியா வருகிறார் ’அதிபர் புதின்’ : டிரம்புக்கு அடுத்தடுத்து செக்

சீனாவிற்கு மட்டும் சலுகை ஏன்? :

சீனாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா 90 நாள் வரி விலக்கு அளித்ததாகவும், அதே நேரத்தில் இந்தியா மீது கடுமையான கட்டுப்பாடுகள் காட்டப்படுவதாகவும் அவர் கூறினார். ஹேலியின் இந்த விமர்சனம், டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு குடியரசு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி இருப்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in