இந்திய பொருட்களுக்கு ”25% அபராத வரி” : நாளை முதல் அமல்

US 25% Additional Tariffs on India : இந்திய பொருட்களுக்கு அபராத வரி விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
United States announced that the imposition of punitive tariffs on Indian goods will come into effect from tomorrow
United States announced that the imposition of punitive tariffs on Indian goods will come into effect from tomorrow
1 min read

பிடிவாதம் பிடிக்கும் அதிபர் டிரம்ப் :

US 25% Additional Tariffs on India : அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே, வரி விதிப்பு, விசா கெடுபிடி, அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை என அதிரடி காட்டி வருகிறார். குறிப்பாக பல்வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா மீது வரி விதிப்பு :

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்(Russia Oil Trade in India) கொள்முதல் செய்யக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை ஏற்க இந்தியா தயாராக இல்லை. இந்தியா எண்ணெய் வாங்குவதால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துகிறது என்பது டிரம்பின் குற்றச்சாட்டு. இது ஏற்கும்படியாக இல்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதன் காரணமாக இந்தியா மீது ஏற்கனவே 25 வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா மீது அபராத வரி :

இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், கூடுதலாக 25 சதவீத வரி(US Tariffs on India) விதிக்கப்படும் என்றும் இது அபராத வரி என்று அழைக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இருதரப்பு உறவு பாதிக்கப்படும் என்று பலர் எச்சரித்த போதும், அதுபற்றி டிரம்ப் கவலைப்படவில்லை. 25 சதவீத வரி ஆகஸ்டு 7 முதல் அமலில் உள்ள நிலையில், அபராத வரி(Punitive Duty on Indian Goods) நாளை முதல் அதாவது ஆகஸ்டு 27ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அபாராத வரி விதிப்பை நிறுத்தி வைக்க அமெரிக்காவுக்கான இந்தியா தூதர் வினய் மோகன் குவாத்ரா, அந்நாட்டு எம்பிக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

27ம் தேதி முதல் அபராத வரி :

இந்தநிலையில், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க : இந்தியாவை மதிப்புமிக்க கூட்டாளியாக நடத்துங்க : டிரம்புக்கு அறிவுரை

இதன்காரணமாக அமெரிக்காவில் விற்கப்படும் இந்திய பொருட்களின் விலை 50 சதவீதம்(Indian Goods in America) வரை அதிகரிக்கும். பொருட்களை கொள்முதல் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டினால், கடைகளில் இந்தியா பொருட்கள் விற்கப்படுவது குறையும். இதனால், பாதிக்கப்பட போவது அமெரிக்க மக்கள்தான்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in