
துணை ஜனாதிபதி தேர்தல் :
CP Radhakrishnan Meet PM Narendra Modi : துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் vs திருச்சி சிவா? :
வரும் 21ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல்(Vice President Election Nomination Date) செய்வார் எனத் தெரிகிறது. போட்டியின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ய எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக திட்டமிட்டு இருக்கிறது. இதனிடையே, டெல்லியில் இன்று காலை நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. திருச்சி சிவாவை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடியுடன் சிபிஆர் சந்திப்பு :
மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்(CP Radhakrishnan Meet PM Modi). இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரியுங்க : ஸ்டாலினுக்கு நயினார் கோரிக்கை
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து :
இதேபோன்று, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ”சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு(CP Radhakrishnan Vice President Candidate) செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவரின் அனுபவம் நமது நாட்டை வளப்படுத்தும். அவர் எப்போதும் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
=====