
ஜெக்தீப் தன்கர் ராஜினாமா :
Indian Vice Presidential Elections 2025 Nomination : குடியரசு துணைத் தலைவராக இருந்த 72 வயதான ஜெக்தீப் தன்கர், 2022ம் ஆண்டு பதவி ஏற்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டுதான் அவரது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் நிலையில், பதவி விலகல் முடிவை எதிர்க்கட்சிகள் பேசுபொருளாக்கின. ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்ற நிலையில், புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு :
அதன்படி தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகஸ்டு 21ம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்களை வேட்பாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். மாநிலங்களவை செயலாளர்கள் இதில் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவர்.
பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும்.
போட்டி இருந்தால் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் காலை 10 மணி முதல் 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் F-101ல் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும்
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்போர், தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் போதிய பெரும்பான்மை இருப்பதால், அதன் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
======