
முதல் இடத்தில் அன்டோரா :
World Most Safest Country Ranking List 2025 India : நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிடுட்டு வருகிறது. அதன்படி, 2025ம் ஆண்டிற்கான நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா முதலிடத்தை(Andorra Rank) பிடித்து இருக்கிறது.
2ம் இடத்தில் அமீரகம், 3ம் இடத்தில் கத்தார் :
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
66வது இடத்தில் இந்தியா :
பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா முன்னிலை(India Rank in World Safest Country Ranking List 2025) பெற்று இருக்கிறது. பட்டியலில் இடம் பெற்று இருக்கும் 147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89வது இடமும் பிடித்துள்ளன.
15வது இடத்தில் சீனா :
தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15ம் இடத்தில் உள்ளது(China Rank in World Safest Country Ranking List 2025). இலங்கை 59வது இடத்தையும், பாகிஸ்தான் 65ம் இடத்தையும், வங்கதேசம் 126வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன.
டாப் 10ல் சிங்கப்பூர் :
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. டாப் 10 இடங்களில் இடம் பெற்று(Top 10 Safest Country in the World) இருக்கும் ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் தான்.
கடைசி இடத்தில் வெனிசுலா :
இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது(World Worst Country Name). மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
மேலும் படிக்க : உலகின் பாதுகாப்பான நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா
நம்பியோ பாதுகாப்பு குறியீடு 2025 :
பயனாளர்கள் அளிக்கும் தரவுகளை கொண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீடு தொகுக்கப்படுகிறது. குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல் பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்டவற்றை ஒப்பீட்டு கருவியாக கொண்ட இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது.
-----