

மகர விளக்கு பூஜைகள் :
Sabarimala Makara Jyothi 2026 Date and Time in Tamil : உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாரதனை நடைபெறும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்
அன்றுமாலை 6 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகர விளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் கடந்த 30ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்
சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள்
எருமேலியில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.மலையேறும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகும் இரண்டு நாட்கள் வரை சன்னிதானத்திலேயே தங்குவதால், சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்திருப்பதுடன், புதிதாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மலையேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
18ம் படி - காத்திருக்கும் பக்தர்கள்
18ம் படியில் ஏறிச்செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் பம்பையிலேயே காவலர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வருகின்றனர். மகரவிளக்கு நாளான ஜனவரி 14 அன்று நேரடி முன் பதிவு மற்றும் ஆன்லைன் மூலம் 30 ஆயிரம் பேர் என மொத்தம் 35,000 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனவரி 19ம் தேதி இரவு(Sabarimala Makara Jyothi 2026 Last Date in Tamil) வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====================